சென்னை: நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டிருக்கிறது. அவர் இதுவரை வெளியிட்ட ட்வீட் பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்ட நீக்கப்பட்டு இருக்கின்றன.
இஸ்ரேலிய உளவு சாப்ட்வேர் மூலமாக அரசியல் பிரமுகர்கள் பலரின் செல்போன்கள் உளவு பார்க்க வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் குஷ்பு ஒரு ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப் பட்டிருப்பது கூடுதலாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது அரசியல் வட்டாரத்தில்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பதிவுகளை வெளியிட்டு அதன் மூலமாக டுவிட்டரில் வெகு பிரபலமாக நாடு முழுக்க அறியப்பட்டவர் நடிகை குஷ்பு.
ட்விட்டர் பிரபலம்
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒரே பதவிகள் கிடைக்காததாலோ, என்னவோ பாஜகவுக்கு தாவினார் குஷ்பு. இதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பதிவுகள் போட்டு வந்தார். மாறி மாறி இவ்வாறு குஷ்பு கட்சிக்கு ஏற்றபடி கருத்துக்களை வெளியிட்டதால் அவரிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வம்பு செய்வது அடிக்கடி நடக்கும். இதன் காரணமாகவும் ட்விட்டரில் குஷ்பு ரொம்பவே பிரபலம்.
யார் இந்த ப்ரையன்
இந்த நிலையில்தான், குஷ்பு ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேண்டில் நேம் குஷ்பூ சுந்தர் என்று இருந்த நிலையில் அது ப்ரையன் (briann) என்று ஆங்கிலத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. யார் இப்படி ஹேக் செய்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இந்தப் பெயர் யாருடையது என்பது யாருக்கும் புரியவில்லை.
13 லட்சம் பாலோவர்கள்
அதேநேரம் அவர் இத்தனை ஆண்டுகாலமாக வெளியிட்டு வந்த பதிவுகள் மொத்தமாக டெலிட் செய்யப்பட்டு உள்ளன. குஷ்புவிற்கு சுமார் 13 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டு காலமாக ட்வீட் மூலமாக சேர்ந்த பாலோவர்கள் அத்தனை பேரும் இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
ட்விட்டர் மெத்தனம்
இதுதொடர்பாக குஷ்பு வட்டாரத்தில் கேட்டபோது ஹேக் செய்யப்பட்டது உண்மைதான். அதை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். மூன்று நாட்களுக்கு முன்பே புகார் கொடுத்துவிட்டோம். இன்னமும் இதை ட்விட்டர் சரி செய்யவில்லை. விரைவில் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இதனிடையே, இன்று மதியம், 3.30 மணிக்கு போலீஸ் டிஜிபி ஆபீஸ் சென்று டிஜிபி சைலேந்திர பாபுவிடம், ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது குறித்து, குஷ்பு புகார் அளிக்க உள்ளார்.