Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

விபத்துகளில் அதிகம் சிக்கும் தனி நபர் கார்கள்! உண்மை பின்னணி என்ன?

bmw_accident_car630

தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது சொந்த கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

விபத்துகளில் அதிகம் சிக்கும் தனி நபர் கார்கள்! உண்மை பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது சொந்த கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கிய வண்டிகள்.

http://www.sumeetmart.com

1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.

2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

http://www.sumeetindia.com

3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.

4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.

இதை தவிர்ப்பது எவ்வாறு?

1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது.  இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.

2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது

3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது.

http://www.dyanoraindia.com

5. நான்கு வழிச்சாலைகளில் ஒரு லயனில் இருந்து மற்றொரு லயனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.

6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.

7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அதிக வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.

8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.

9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டுமூன்று தடவையாக உண்பது நலம்.

10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp