Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

வித்தியாசாமான முறையில் Workout செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்திய இளைஞர்….

helicopter-pull-up

மனிதராக பிறந்த அனைவருக்குமே தன் வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அது சாதாரணமான விஷயமோ இல்லை, அசாதாரண விஷயமோ அந்த விஷயத்தை செய்தாக வேண்டும் என்கிற இலட்சியமாக கூட இருக்கலாம்.

அந்த வகையில் இளைஞர் ஒருவருக்கு அசாதாரண லட்சியம் ஒன்று உருவாகியுள்ளது.ஒரு விபரீத சாதனையை தான் ஹெலிகாப்டர் மூலம் ஒரு இளைஞர் முயற்சி செய்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு பதிவிட்டுள்ளது.

ரோமன் என்கிற 23 வயது இளைஞர் தான் இந்த சாதனை முயற்சியை செய்துள்ளார். பறக்கும் ஹெலிகாப்டரில் அதன் கீழ் பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு இவர் ஒரு நிமிடத்தில் 23 Pullups செய்துள்ளார். இது கேட்கவே நமக்கு சற்று திகிலை ஏற்படித்தினாலும்,இது உண்மையில் நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டரில் உள்ளே உட்கார்ந்து பறப்பதே பெரிய சாதனையாக இருக்கும்போது இந்த இளைஞருக்கு பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருந்துள்ளது.இவரது வீடியோவை கின்ன்ஸ் உலக சாதனை அமைப்பு தனது அதிகார பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp