Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மகாராஷ்டிராவில் பயங்கர நிலச்சரிவு- 36 பேர் பலி; மேலும் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்- மோடி இரங்கல்

landslide-1563355630-1627036820

மும்பை: மகாராஷ்டிராவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவுகளில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் 3 மணிநேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்

மும்பை- பெங்களூரு சாலையில் நெரிசல்

மழை வெள்ளத்தால் மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மழை வெள்ள மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராய்காட் நிலச்சரிவு

இதனிடையே ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

30 பேர் கதி என்ன?

நிலச்சரிவுகளில் சிக்கிய மேலும் 30 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் நிலச்சரிவு உயிரிழப்ப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

மோடி இரங்கல்

ராய்காட் நிலச்சரிவியில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp