Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பெண்கள் தனியாக பயணம் செய்ய தடை: ஆப்கனில் தொடரும் சர்ச்சை உத்தரவுகள்…தலிபான்கள் அட்டூழியம்..!!

taliban-updatenews360-1024x571

பெண்கள் தனியாக வெளியே நடமாடக் கூடாது என்ற தலிபான்களின் உத்தரவு மனித உரிமை ஆர்வலர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின் அங்கு மீண்டும் ஆட்சியை நிறுவியிருப்பதுடன் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆப்கனை கைப்பற்றிய போது, ‘நாங்கள் முன்பு போல கிடையாது, இனி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருப்போம் என தெரிவித்தனர்.’ ஆனால், அது பெயரளவிற்கே என்பதை நிரூபிப்பதை போல பெண்களுக்கு எதிராக பல்வேறு சர்ச்சை உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

இதனிடையே ஆப்கன் அரசின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளை தடுப்பதற்கான அமைச்சகம் பெண்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 45 மைல்கள் தொலைவுக்கு மேல் பயணிக்கும் பெண்கள் கட்டாயம் ஒரு ஆண் உறவினரின் துணையுடன் தான் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆண் துணை இல்லாத பெண்களை வாகனங்களில் ஏற்றக் கூடாது என அனைத்து வாகன உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அப்படி பயணிக்கும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும். வாகனங்களில் பொதுமக்கள் இசையை கேட்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களை குறிவைத்து ஆப்கானில் தாலிபான் அரசு பிறப்பித்து வரும் உத்தரவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதுடன் மனித உரிமை ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp