தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.கதையை மட்டும் பெரும் ஆயுதமாக வைத்து,சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து தமிழ் சினிமாவை உயர்த்திய பங்கு இவருக்கு உண்டு.
இவர் நடிக்க தெரிந்தவர்களை விட, நடிக்கதெரியாதவர்களை நடிக்க வைத்து அவர்களுக்கு பேந்ரும் புகழும் வாங்கித் தந்தவர். எத்தனையோ நடிகர், நடிகைகள்,இயக்குநர்களை அறிமுகம் செய்து வைத்தவர் பாரதிராஜா..
இவர் படத்தில் நடித்தால் கொடி கட்டி பறக்கலாம். அப்படி மெனக்கெட்டு நடிக்கவைத்து விடுவார்.எத்தனை நடிகர்கள் நடிக்க வைத்தாலும், இவர் படத்தில் நடிக்காத நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் குறிப்பிட்ட ஒரு நடிகரை மட்டும் வைத்து படம் இயக்கமாட்டேன் என 17 வருடமாக முரண்டு பிடித்து வருகிறார்.
அந்த நடிகர் வேர யாரும் இல்லை ….நம்ப சூப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த சரத்குமார் பின்னர் ஹீரோவாக களமிறங்கி அதிக வெற்றி படங்களை குவித்து நிலையான கதாநாயகனாக மாறினார்.
இந்த நிலையில் சரத்குமாருடன் இணையமாட்டேன் என பாரதிராஜா முரண்டு பிடிப்பதற்கு காரணம், ஒரே ஒரு படம் தான். தகப்பன் சாமி என்ற படம் உருவாக இருந்தது.
தயாரிப்பாளர் தேனப்பன் பாரதிராஜாவிடம் பேசி ஓகே வாங்கினார். கதாநயகனாக சரத்குமார் ஒப்பந்தம் ஆனார்.
சூட்டிங்கிற்கு தயாரான நேரத்தில் காவிரி பிரச்சனை காரணமாக சரத்குமார்,பாரதிராஜா இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.மாறி மாறி இருவரும் விமர்சனம் செய்த நிலையில் கோலிவுட்டில் அப்போது இவர்களது சண்டை பேசுபொருளாக மாறியது.
இதில் கடுப்பான பாரதிராஜா, தயாரிப்பாளருக்கு போன் செய்து ஹீரோவை மாத்து இனி வாழ்நாளில் சரத்குமாரை வைத்து படம் இயக்கமாட்டேன் என கூறிவிட்டாராம். இதனால் தான் இருவரும் சேர்ந்து பணியாற்றியதில்லை.
அதன்பிறகு இருவரும் சந்தித்து கூட பேசுவதை தவிர்த்துள்ளனர். சரத்குமார் மனைவியான ராதிகவை சினிமாவுக்கு அறிமுகம் செய்த்து பாரதிராஜாதான் என்பது நினைவுகூரத்தக்கது.