சென்னை : குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை துவக்கிய மஞ்சிமா மோகன், மலையாளத்தில் 2015 ல் ரிலீசான ஒரு வடக்கன் செல்ஃபி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்தார்.
இரண்டாவது படமே கோலிவுட்டில் சிம்புவிற்கு ஜோடியாக, அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தார். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். இந்த படம் சுமாரான வசூலை பெற்றாலும் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். Ask me anything தலைப்பில் ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா அல்லது கமிடெட்டா என கேட்டார்.
அதற்கு அட்டகாசமாக மீம் ஒன்றை பதிவிட்டு பதிலளித்தார் மஞ்சிமா. அதில், இரு குழந்தைகள் முத்தமிட்டு கொண்டிருப்பது போலவும், இந்த காட்சியை தூரத்தில் இருந்து ஒரு சிறுவன் கோபத்துடன் பார்ப்பதை போன்றும் இருந்தது.
அந்த மீம் உடன், ஒவ்வொருவரும் காதலில் விழுவார்கள். நான் இப்படி தான் இருக்கேன் என்றார். மேலும் எனது வாழ்க்கையில் 3 முக்கியமான விஷயங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம். குடும்பம் மற்றும் தொழில். சினிமாவை தவிர தனக்கு கேக் செய்ய ரொம்ப பிடிக்கும் எனவும் அதில் ஆர்வம் அதிகம் எனவும் மஞ்சிமா கூறி இருந்தார்.