சென்னை: திமுக அரசை குறை கூற முடியாத நிலைமைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், அதிமுக மறுபடியும் திமுக ஆட்சிக்கு எதிரான ஒரு நடவடிக்கையை கையில் எடுக்க போகிறதாம்.. இதற்கு ஸ்கெட்ச் போட்டதே டெல்லி மேலிடம்தானாம்..!
கடந்த வாரம் திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.. அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது லிஸ்ட் போட்டு திமுகவை குறை சொல்லி இருந்தார்:
“திமுக பெரும்பான்மை இடங்களிலே வெற்றி பெற்று நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முதல் வேலை நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதனை தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள்.. ஆனால், தேர்தல் முடிந்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பேட்டி
மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் – டீசல் விலை குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவாக வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகள் எதையுமே இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை” என்று கூறியிருந்தார்.
திமுக
ஆட்சி ஆரம்பித்து 75 நாட்களில் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியாது என்பது அனைவருக்குமே தெரியும் என்றாலும், அதுவும் லாக்டவுன் சமயத்தில் முழுமையாக அறிவிப்புகளை அமல்படுத்த சாத்தியமில்லை என்பது தெரியும் என்றாலும், திமுக மீது எதையாவது இப்படி கிளப்ப வேண்டும் என்று அதிமுக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவே பார்க்கப்பட்டது..
பிரச்சனைகள்
அதேசமயம், அதிமுக எழுப்பி உள்ள இந்த பிரச்சனை தொடர்பாக, நடக்க போகும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஸ்டாலின் மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார் என்பதையும் மறுக்க முடியாது.. அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ள நிலையில், ஓட்டு கேட்டு தமிழக மக்களை நேருக்கு நேர் சந்தித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் திமுக உள்ளதால், முக்கிய திட்டங்களை அறிவிக்கும் பணிகளிலும் திமுக இறங்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன.
திமுக
இப்போது விஷயம் என்னவென்றால், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கூட்டணி அதிரடியாக செயல்பட முடிவு செய்துள்ளதாம்.. அதாவது, அரசு தரப்பில் எந்த ஒரு விஷயம் கொண்டு வந்தாலும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.. சட்டசபையில் பேச விடாமல் தடுக்கப்பட்டால்தான், திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது வெளிநடப்பு செய்தது.
கூட்டணிகள்
அதனால், அதிமுக கூட்டணி கட்சிகள் அதுபோல் இல்லாமல், இப்போதைக்கு பார்லிமென்டில் என்ன நடந்து வருகிறதோ, அதுபோலவே, இங்கேயும் செயல்பட திட்டமிட்டுள்ளனவாம்.. கூச்சல், குழப்பம் என்று சபையை முடக்குவது என்று அதிரடியாக செயல்பட இந்த பிளான்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது..
டெல்லி
அதுமட்டுமல்ல, அதிமுக தலைவர்கள் கடந்த வாரம் டெல்லி சென்றபோதே, இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. பாஜக மேலிடம் என்ன சொல்லி அனுப்பியதோ, அந்த உத்தரவையே இங்கு சட்டசபையில் செயல்படுத்தவும் அதிமுக கூட்டணிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதிமுக – பாஜகவின் இப்படி ஒரு மூவ் பற்றி கேள்விப்பட்ட திமுக அதிர்ந்து போயுள்ளதாம்.. காரணம், மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்காமல் தடுத்து நிறுத்தி வைத்ததே இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்காத்தான்..
அறிவிப்புகள்
மிக மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட திமுக முடிவு செய்துள்ளது.. அத்தகைய முடிவுகளை அவையில் அறிவிக்கும்போது, அவைகளை திசை திருப்பும் வகையில், ஏதாவது கூச்சல் குழப்பத்தில் எதிர்க்கட்சிகள் இறங்கி விடக்கூடும் என்பதால்தான், மாஜிக்கள் மீதான விசாரணைகளை தள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், அதையும் மிஞ்சும் வகையில் அதிமுக – பாஜகவும் பிளான் செய்துள்ளது மேலும் குழப்பத்தில் திமுகவை தள்ளி உள்ளது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!