சிறுமிகளுக்கு ஆபாச படம் – பாலியல் தொல்லை- மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மகாலிங்கம் போக்சோவில் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். அப்பகுதியில் பாஜக நிர்வாகியாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
6 சிறுமிகளிடம் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம் மகாலிங்கம். அத்துடன் அவர்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் இதைப்பற்றி கூறியுள்ளனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.