Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கோடநாடு விவகாரம்: திடீரென களத்தில் குதித்த கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார்

rajeshkumar7-600-1563509560-1629786151

சென்னை: எனக்கு அரசியல் பிடிக்காது, ஆனால் அரசியலுக்கு என்னை மிகவும் பிடிக்கும் போலிருக்கிறதே என எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை நேற்றைய தினம் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருவதற்கான மனுவை அளித்துள்ளேன்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரையும் அளித்த பேட்டியில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் எப்படி விவாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி

அப்படி என்றால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படையில் இந்த பிரச்சினையை சட்டசபையில் பேசினார். எந்த அடிப்படையில் பத்திரிகையாளர்களிடம் கொடநாடு விவகாரம் குறித்து பேசினார். கவர்னரை சந்தித்து எப்படி மனு அளித்தார்.

மர்ம முடிச்சுகள்

கொடநாடு விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. அங்கு சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல வி‌ஷயங்கள் மர்மமான முறையில் நடந்துள்ளன. கொடநாடு விவகாரத்தில் ராஜேஷ்குமார் நாவலை விட மர்மங்கள் அதிகமாக உள்ளன.

அதிமுக தொண்டர்கள்

கடந்த 2 நாட்களாக அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு நீங்களாவது கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளியில் வர சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் என்றார் செல்வப்பெருந்தகை. இந்த நிலையில் ராஜேஷ்குமார் நாவலை கொடநாடு பங்களா மர்மங்களுடன் ஒப்பிட்டது குறித்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் பிடிக்காது

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனக்கு அரசியல் பிடிக்காது, ஆனால் அரசியலுக்கு என்னை மிகவும் பிடிக்கும் போலிருக்கே என ராஜேஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவரது பாலோயர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அரசியல் யாருக்கு பிடிக்கும்

உங்களைப்போன்ற அறிவு ஜீவிகளுக்கே அரசியல் புடிக்கலன்னா, யாருக்கு புடிக்கனும்!? எல்லாருக்கும் அரசியல் பிடிக்கனும், எல்லாருமே அரசியல் அறியனும். அரசியலை நேசியுங்கள் ஐயா. நம்முடைய அரசியலை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் இந்க வலைஞர்.

ஏகப்பட்ட திருப்பங்கள்

நீங்களே இந்த சம்பவத்தை வைத்து ஒரு கதை எழுதலாம் சார். அந்த அளவுக்கு சுவாரஸ்யமான சம்பவம் நிறைய இருக்கு. பொதுவா அரசியல் கொலைகளை விசாரிச்சா ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கும் என்கிறார் இந்த வலைஞர்.

அரசியலாக்க முடியும்

ஏன் அரசியல் பிடிக்காது? ( இதற்கு எந்த பதில் நீங்க சொன்னாலும் அதை அரசியலாக்க முடியும்..) என்கிறார் இந்த நெட்டிசன்.

விஷயங்கள்

அறிவியலுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் சார்..எவ்வளவோ அறிவியல் விஷயங்களை தங்கள் கதைகள் மூலம் எளிமையாக விளக்கியிருக்கிறீர்களே..

ரெடி செய்ங்க

இந்நேரம் நீங்க இந்த சம்பவத்தை கருப்பொருளாக வைத்து ஒரு கதையை ரெடி செய்திருக்கணுமே என்கிறார் இந்த நெட்டிசன்.

காலா காலத்துக்கு

சட்டசபை ரெக்கார்டில் பதிவாயிட்டீங்க.. காலாகாலத்துக்கு உங்க பெயர் நிலைத்திருக்கும்..!

அடங்கிய அரசியல்

“ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அரசியல் அடங்கியிருக்கிறது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp