Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கல் நெஞ்சத்தியே மிஞ்சிய (தாய்) பேய்

Illegal-Love-Updatenews360-1024x571

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கள்ளக்காதலுக்கு பிறந்த ஒரு நாள் பச்சிளம் குழந்தையின் உடலில் கல்லை கட்டி கள்ள காதலுடன் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கோர சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணை மறைத்த கள்ளக்காதல்

தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இரவு நிறைமாத கர்ப்பிணியாக பெண் ஒருவர் பிரசவ வலியால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் 40 வயது பெண்ணை ஆண் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தார்.

அப்போது மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட முகவரியில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி சவுந்தரமணி (வயது 40 ) என்பது என அவருடன் வந்த நபர் தெரிவித்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். அப்போது பிரசவத்திற்காக வரும் வந்த பெண்ணை உடனடியாக அனுமதிக்குமாறு தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து அந்த பெண்ணை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். சேர்த்த சில மணி நேரத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது . பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருந்ததால் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி விட்டு செவிலியர்கள் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் 25 ஆம் தேதி அதிகாலையில் 5 மணிக்கு செவிலியர்கள் குழந்தை பெற்ற தாய் மற்றும் குழந்தையை மருத்துவ பரிசோதனை கூடத்துக்கு அழைத்து செய்வதற்காக வார்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது தாய் மற்றும் குழந்தை கர்ப்பிணியை அழைத்து வந்த நபரும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியரகள் தலைமை மருத்துவர் சிவபாலனிடம் தெரிவித்தனர். தலைமை மருத்துவர் சிவபாலன் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் யார்? எதற்காக திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தை பெற்றுக் கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தாராபுரம் போலீசார் பெண் காணவில்லை என வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினார். காணாமல் போன பெண்ணின் முகவரியை வைத்து சென்றபோது தவறான முகவரி கொடுக்கப்பட்டிருந்தது மேலும் அந்த முகவரியில் குறிப்பிட்ட செல்போனை நம்பரை கொண்டு அழைத்தபோது போனை எடுத்தவர் திடீரென தகவலை துண்டித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த தாராபுரம் போலீசார் சிசிடி டிவி கேமராவில் பதிவான பெண்ணின் புகைப் படத்தை வைத்து கொண்டு அந்தப் பெண் எந்த ஊர் என்பது கண்டுபிடித்தனர். பிறகு அப்போது அந்தப் பெண் திண்டுக்கல் மாவட்டம் அப்பலூத் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி சகுந்தலாமணி என்பதும், இவருடைய கணவர் சுப்பிரமணி சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து உள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் 17 வயதில் ஒரு ஆண் குழந்தை ஆண் மகன் இருந்தது இருப்பது தெரியவந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் கடந்த 24 ஆம் தேதி இரவு பிறந்த குழந்தையை எங்கே? என போலீசார் அந்த பெண்ணிடம் துருவி துருவி கேள்வி கேட்டனர்.

அதற்கு அந்த பெண் சகுந்தலா மணி முன்னுக்குப்பின் முரணான பதில் கூற வந்தார். மேலும் போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தும் போது அந்தக் குழந்தை உறவினரிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால் போலீசார் அதை நம்பவில்லை.

அந்த உறவினரை காட்டும்படி கூறியும் அதற்கும் அவர் பதில் கூறவில்லை. மேலும் போலீசார் தனது விசாரணை பிடியை இறுக்கினர்.
விசாரணையில், அந்த குழந்தை எனக்கும் பக்கத்து தோட்டக்காரர ரத்தினசபாபதி (வயது 40) என்பவருக்கும் பிறந்தது என கூறினார்.

டிராக்டர் டிரைவரான ரத்தினசபாபதி அடிக்கடி எனது தோட்டத்திற்கு டிராக்டர் கொண்டு நிலத்தை உழுவதற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்தப் பழக்கத்தின் மூலம் கள்ள தொடர்ப்பு ஏற்பட்டு கர்ப்பம் தரித்ததாகவும் தெரிவித்தார்.

இதனால்தான் யாருக்கும் தெரியாமல் ரத்தினசபாபதி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் உறவினர் எனக்கூறி என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அந்த குழந்தை பிறந்தது அந்த குழந்தையுடன் நானும் ரத்தினசபாபதி அதிகாலையில் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டரிடம் தகவல் தெரிவிக்காமல் குழந்தையை எடுத்துக்கொண்டு திரும்பினோம்.

செல்லும் வழியில் இந்த குழந்தையை கொண்டு போனால் உறவினர்கள் என்னை ஒதுக்கி விடுவார்கள் என நினைத்து தாராபுரம் அடுத்துள்ள காட்டம்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குழந்தையின் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி விட்டு வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த போலீசார், சகுந்தலாமணியை அழைத்து வந்து கிணற்றில் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. அதனை மீட்டு தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு சகுந்தலா மணி மற்றும் கள்ளக்காதலன் ரத்தினசபாபதி ஆகிய இருவர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்து சகுந்தலா மணியை கைது செய்தனர். இதில் ரத்தினசபாபதி தலைமறைவானார்.

தலைமறைவான ரத்தின சபாபதிக்கு திருமணமாகி ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp