Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ஏம்மா இப்படி சொன்ன.. நம்ம கிட்ட இருக்குற 2 கார்களும் சொகுசு கார்கள்தான்.. பப்ஜி மதன் அட்வைஸ்

samayam-tamil-1623856311

சென்னை: நம்மிடம் இருக்கும் இரு கார்களும் சொகுசு கார்கள்தான் என மனைவி கிருத்திகாவுக்கு பப்ஜி மதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

பப்ஜி மதன் யூடியூப்பில் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டதாக கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி தருமபுரியில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஆபாச பேச்சு யூடியூப் சேனலுக்கு மனைவி கிருத்திகா தலைமை நிர்வாகியாக செயல்பட்டதாக அவரும் கைது

இந்த நிலையில் ஜூலை மாதம் 6-ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே அவருடைய மனைவி ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகம்

அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது கணவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு தடை கோரி மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை மதன் விளையாடவில்லை. சீன செயலியைதான் தடை செய்துள்ளார்கள்.

மதன் விளையாடியது கொரிய நாட்டுடையது

கொரிய நாட்டு செயலியை பயன்படுத்திதான் மதன் விளையாடினார். அதற்காக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எந்த தவறும் செய்துவிடவில்லை. எங்களிடம் சொகுசு கார்கள் இல்லை. இருப்பது ஆடி கார் மட்டுமே. அதுவும் மதன் பெயரில்தான் உள்ளது என்றார். ஆடி காரை சொகுசு கார் இல்லை என சொன்னதை அடுத்து கிருத்திகாவை கடுமையாக டிரோல் செய்தனர்.

ஆடி கார் நிறுவனத்தாரே

ஆடி கார் நிறுவனத்தாரே உங்கள் காரை என்ன கார் என சொல்லி மதனுக்கு விற்றீர்கள் என சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் மதன் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதை அறிவுரைக் கழகம் உறுதி செய்தல் வேண்டும். அதனடிப்படையில் பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜராகி தன் மீது போடப்பட்டுள்ள குண்டாஸை ரத்து செய்ய வேண்டும் என கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி, ராமன் உள்ளிட்டோர் முன்பு ஆஜராகினார்.

அறிவுரை கழகம் முன் ஆஜர்

அப்போது கைக்குழந்தையுடன் மனைவி கிருத்திகாவும் ஆஜராகியுள்ளார். கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து தங்களது வாதத்தை முன்வைத்தனர். அதில் ” இந்தியாவில் தடை செய்யப்பட்டது பப்ஜியின் சீன வெர்ஷன். ஆனால் நாங்கள் விளையாடியது கொரிய வெர்ஷன். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு எந்தவித தவறும் செய்யவில்லை. ஆகவே பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

சொகுசு கார்கள்

இந்த விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு மதனை வேனில் அழைத்து செல்ல போலீஸார் தயாராகினர். அப்போது பப்ஜி மதனுடன் மனைவி கிருத்திகா பேச விரும்பியதை அடுத்து இருவரையும் சில மீட்டர் தூரம் நின்றுக் கொண்டு பேச போலீஸார் அனுமதி அளித்தனர். மேலும் பப்ஜி மதன் தனது மனைவியிடம் கூறுகையில், நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களும் சொகுசு கார்கள்தான்.

பப்ஜி மதன் கிருத்திகாவுக்கு அறிவுரை

இனி நம்மிடம் சொகுசு கார் இல்லை என வெளியே சொல்லாதே. காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இரு கார்களையும் வழக்கறிஞர்களை வைத்து வெளியே எடுத்துவிடு என அறிவுரை கூறினாராம். மேலும் கிருத்திகா யாரோ 4 பேர் 200 முறை புகார் கொடுத்துள்ளனர். அதற்காக தமிழகம் முழுவதும் 200 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுவது தவறு என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தனது கணவர் ஆபாசமாக பேசவில்லை என்றும் அவரது குரல் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp