மதுரை : மதுரையில் நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பிஸ்கட், டீ வழங்கும் காவல் உதவி ஆணையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.காவல்துறையினர் சோதனையை தவறாக புரிந்து கொண்டவர்களே அதிகம், காவல்துறை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தினாலே, அது லஞ்சம் வாங்கத்தான் நிறுத்துகிறார்கள் எனற மனப்போக்கு மக்களிடம் அதிகமாக உள்ளது.
ஆனால் உண்மையில் காவலர்கள், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தடுப்பது, போதையில் வாகனத்தில் செல்வதை தடுப்பது. சிறுவனர்களை வாகனம் ஓட்டவிடாமல் தடுப்பது. தலைகவசம் அணிய வலியுறுத்துவது போன்றவற்றைத்தான் செய்கிறார்கள். ஆனால் விதிகளை சுத்தமாக மதிக்காமல் போலீஸ் மீது பழிபோடுவது அதிகமாக இருக்கிறது.
டீ பிஸ்கெட் கொடுப்பார்
இந்நிலையில் மதுரை தல்லாகுளம் உதவி ஆனையர் சேகர் இரவு பணியின் போது நள்ளிரவில வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை முகம் கழுவ செய்து அவர்களுக்கு டீ, பிஸ்கட் கொடுத்து வழியனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
வாகனங்கள் நிறுத்தம்
அதே போல் நேற்று இரவு பணியின் போது உதவி ஆனையர் சேகர் , மதுரையின் கோரிப்பாளையம் பகுதியில் நள்ளிரவில் வரும் லாரி, வேன் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தினார்.
பாராட்டு
வாகன ஓட்டிகளை முகம் கழுவ செய்து பிஸ்கட், டீ, முக கவசம் கொடுத்து, தூக்கம் வந்தால் வாகனத்தை நிறுத்தி தூங்கி அதன் பின் செல்லவும் அறிவுறுத்தினார். மேலும் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டி சென்றால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இந்த காவல் அதிகாரியின் செயலை பார்த்த தன்னார்வலர்கள் பாரட்டி வருகின்றனர்.
மதுரை ஹேப்பி
வாகன ஓட்டிகள் கூறும் போது கனரக வாகனங்களை ஒட்டி வந்தாலே போதும் வாகனத்தை நிறுத்தி லைசென்சை எடு, ஆர்சியை எடு என மிரட்டல் குரல், 500 ஐ கொடு, 1000 கொடு, அபராதம் போடனும் என மிரட்டி வரும் போலீசாருக்கு மத்தியில் முகம் கழுவ சொல்ல பிஸ்கட், டீ கொடுத்து அனுப்பி வைக்கும் இந்த போலீஸ் அதிகாரியை பார்க்கும் போது பெருமையாக உள்ளது என்றார்கள்.