Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

இனி 15% கார்பரேட் வரிக் கட்டாயம்.. 130 நாடுகள் ஒப்புதல்.. பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செக்..!

60de30030d82f-image1-1625217114

பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் லாப அளவீட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் குறைவான கார்பரேட் வரி கொண்டு நாடுகளின் கணக்கில் லாபத்தைக் கணக்குக் காட்டுகிறது. இதனால் பல நாடுகள் அதிகளவிலான வரி வருமானத்தை இழக்கிறது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், அமெரிக்காவில் இருக்கும் பெரும் டெக் நிறுவனங்கள் இந்த முறையைப் பயன்படுத்தி அதிகளவிலான வரியைச் செலுத்தாமல் தப்பித்து வருகிறது.

130 நாடுகள் 15% கார்பரேட் வரி-க்கு ஒப்புதல்

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முயற்சியில் OECD அமைப்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தற்போது 130 நாடுகள் குறைந்தபட்ச கார்பரேட் வரி அளவீடாக 15 சதவீதம் நிர்ணயம் செய்ய ஒப்புக்கொண்டு உள்ளது.

OECD அமைப்பின் பேச்சுவார்த்தை

உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே இத்தகைய முடிவுகளை எடுக்க முடியும், அந்த வகையில் பாரீஸ் நகரத்தில் இருக்கும் Organisation for Economic Cooperation and Development அமைப்பு கடந்த 2 நாட்களாகப் பேச்சுவார்த்தை நடந்தி முக்கிய முடிவை எட்டியுள்ளது.

உலகின் ஜிடிபி

உலகின் ஒட்டுமொத்த ஜிடிபி-யில் 90 சதவீதம் பங்கு வகிக்கும் 130 நாடுகள் தங்கள் நாட்டின் கார்பரேட் வரியைக் குறைந்த பட்சம் 15 சதவீதம் வரை மட்டுமே நிர்ணயம் செய்வோம் என ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த முடிவின் மூலம் உலக நாடுகளுக்குச் சுமார் 150 பில்லியன் டாலர் கூடுதலாக வரி வருமானம் கிடைக்கும்.

பெரு நிறுவனங்கள்

இந்த முடிவின் மூலம் உலக நாடுகளில் இருக்கும் பெரு நிறுவனங்கள் தங்களது லாபத்தைக் குறைவான வரி இருக்கும் நாடுகளுக்குத் திருப்ப முடியாது. இது சிறிய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்குச் சில பாதிப்புகளை உருவாக்கினாலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கக் கூடியது.

7 பெரும் பொருளாதார நாடுகள்

ஜூன் மாத துவக்கத்திலேயே உலகின் 7 பெரும் பொருளாதார நாடுகள் குறைந்தபட்சம் 15 சதவீத கார்பரேட் வரித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 130 நாடுகள் வரையில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அக்டோபர் மாதம் முழுமையான திட்ட வடிவம் வெளியிடப்பட்டு 2023ல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

9 நாடுகள் மறுப்பு

அயர்லாந்து, எஸ்டோனியா, ஹங்கேரி, பெரு, பார்படாஸ், செயிண்ட் வின்சென்ட், கிரெனடைன்ஸ், இலங்கை, நைஜீரியா மற்றும் கென்யா ஆகிய 9 நாடுகள் இதற்கு ஒப்பதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாடு

இதேபோல் பிரான்ஸ் நாடு தலைமையில் பல ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்க டெக் நிறுவனங்களான அமேசான், கூகிள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் மீது வரி விதித்தது வந்தது. இந்நிலையில் பைடன் தலைமையிலான அரசு உலகம் முழுவதும் ஓரே வரித் திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ள காரணத்தால் இந்த டிஜிட்டல் வரியை நீக்க முடிவு செய்துள்ளது.

ப்ரூனோ லே மாரி – பிரான்ஸ் நிதிமையச்சர்

இந்தத் திட்டத்தைப் பிரான்ஸ் நாட்டின் நிதிமையச்சர் ப்ரூனோ லே மாரி நூற்றாண்டில் மிக முக்கியமான சர்வதேச வரி ஒப்பந்தம் இது எனவும் குறிப்பிட்டார். மேலும் சிறிதோ, பெரியதோ எந்த ஆன்லைன் நிறுவனமாக இருந்தாலும் அந்நாட்டில் செய்யப்படும் வர்த்தகத்திற்கு வரி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

15 சதவீத கார்பரேட் வரி

மேலும் இப்புதிய 15 சதவீத கார்பரேட் வரி என்பது 750 மில்லியன் யூரோ அல்லது 889 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருடாந்திர விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் சிறிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படாது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp