சென்னை: மாஜிக்கள் மீதான ஊழல்கள் குறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கான முதல் அதிரடியை ஸ்டாலின் அரசு துவக்கி உள்ளது..!
2 மாதமாகவே அதிமுக முன்னாள்கள் குறித்த ஊழல் மற்றும் மோசடிகள் குறித்த விசாரணை தோண்டி எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், கொரோனா தடுப்பு காரியங்களால் தள்ளி போடப்பட்டிருந்தது.
தற்போது தொற்று பாதிப்பு குறையவும், ஊழல் லிஸ்ட் ரெடியானதாக சொல்லப்பட்டது.. அந்த லிஸ்ட்டில் 8 பேர் இருக்கிறார்கள்.. சம்பந்தப்பட்டவர்களிடம் முக்கிய ஃபைல்களும் அதிகாரிகள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
புலம்பல்
இதனால் பதறிப்போன அந்த 8 பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு போனை போட்டு புலம்பி உள்ளதாக தெரிகிறது.. அதற்கு எடப்பாடி பழனிசாமி, “அதெல்லாம் சும்மா.. திமுக அப்படி நம்ம மேல கேஸ் போட முடியாது.. அப்படி நம்ம மீது கேஸ் போட்டால், கடந்த ஆட்சியில் ஊழலில் சிக்கிய திமுக புள்ளிகளின் மீது நாம திருப்பி கேஸ் போடலாம்.. அவங்க லிஸ்ட்டும் என்கிட்ட இருக்கு.. எல்லாரும் தைரியமா இருங்க” என்று சொன்னதாக தகவல்களும் கசிந்தன.
மோசடி
இப்போது விஷயம் என்னவென்றால், ஸ்டாலின் சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார்.. ஆனால் அந்த லிஸ்ட்டில் இல்லாத மாஜி அமைச்சர் சரோஜா தரப்பு சிக்கி உள்ளது.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 பேரிடம் ரூ.35 லட்சத்தை மோசடி செய்துவிட்டாராம் சரோஜாவின் உறவினர்.. அவரைதான் கைது செய்துள்ளது போலீஸ்.
சரோஜா
விக்கிரவாண்டி தாலுகா கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குணசேகரன்… இவர், கடந்த 2018-ல் பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த பாக்யராஜ் மூலம், அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் அக்காள் மகனான, ரமேஷ்பாபு என்பவருக்கு அறிமுகமானார்… அப்போது குணசேகரன், பாக்யராஜ் ஆகிய 2 பேரிடமும் ரமேஷ்பாபு, தன்னுடைய சித்தி சரோஜா மூலமாக, யாராவது அரசுப்பணியில் சேர விரும்பினால் அவர்களின் இன்டர்வியூ அட்டையை கொடுத்தால், அரசு பணிக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட தொகையை பெற்று உறுதியாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்
2 வருடம்
இதனை நம்பி, குணசேகரனும், தனக்கு தெரிந்த 17 பேருக்கு சத்துணவு வேலை உட்பட பல்வேறு வேலைகளை வாங்கி தரும்படி கேட்டு, அதற்காக ரூ.35 லட்சத்தையும் தந்துள்ளார்.. ஆனால், ரமேஷ்பாபு 2 வருடமாகியும் ஒருத்தருக்குகூட வேலை வாங்கி தரவில்லை.. ஆட்சியே முடிந்துவிட்டது.. குணசேகரன், பலமுறை ரமேஷ்பாபுவை பணத்தையாவது திரும்ப தந்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்..
மோசடி
இரண்டுமே இல்லை என்று சொல்லி விட்டாராம்.. அதுமட்டுமல்ல பணம் பெற்ற விவரத்தை பற்றி யார்கிட்டயாவது சொன்னால், சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாகவும் ரமேஷ்பாபு மிரட்டி உள்ளார். இதற்கு பிறகுதான், குணசேகரன், விழுப்புரம் மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் கொடுக்க, அதன்பேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரமேஷ்பாபுவை கைது செய்து உள்ளே வைத்துள்ளனர்.. முன்னாள் அமைச்சரின் உறவினர் என்றும் பாராமல், காவல்துறை அதிரடியை செய்துள்ளது, அதிமுக வட்டாரத்தையே கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.. அடுத்து யாரோ?!