Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ஆலயங்களில் தமிழ் ஒலிக்கத் தொடங்கியாச்சு…!!!

stalin-updatenews360-1

ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளதாகவும், அறிவுக் கோயில்களை கட்டுவதில் ஆர்வமாக தமிழக அரசு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை – நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பங்கேற்று திறந்து வைத்தார். பின்னர் 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை அவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- கொரோனா பரவலால் புத்தகக் கண்காட்சி ஒத்திப்போனது மிகவும் சிரமமாக இருந்தது. அரசின் ஒத்துழைப்புடன் மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். சென்னை புத்தகக்காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் தொகையுடன் சேர்த்து கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்தாய் வாழ்த்து மாநில பாடலாக ஆக்கப்பட்டுள்ளது. ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. அறிவுக் கோயில்களை கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு. மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது. எனக்கு அன்பளிப்பாக வந்த ஒன்றரை லட்சம் புத்தகங்களை பல ஊர்களில் உள்ள நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன். என்னுடைய 23 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்த தகவல்கள் அடங்கிய, நான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் இம்மாத இறுதியில் வெளியாகும், எனக் கூறினார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp