சென்னை: அருவி இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படைப்பான வாழ் திரைப்படம் நள்ளிரவில் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியானது.நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
அருவி படத்தில் நடித்த பிரதீப் இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். டிஜே பானு, திவா தவான் மற்றும் ஆரவ் நடித்துள்ள வாழ் திரைப்படம் எப்படி இருக்கு என ட்விட்டர் வாசிகள் வெளியிட்டு வரும் விமர்சனத்தை இங்கே காண்போம்.

வெளியானது வாழ்
சோனி லைவ் ஒடிடி தளத்தில் நேற்று நள்ளிரவு வாழ் திரைப்படம் வெளியானது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார். அருவி படத்தில் நடித்த நடிகர் பிரதீப் உடன் ஏகப்பட்ட புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படம் டிராவல் படமாக அமைந்துள்ளது.

நாளைக்கி அது நாளைக்கி
நாளைக்கி நல்லா இருக்கணும்னு இன்றைய வாழ்வை மனிதர்கள் தொலைத்து வாழும் கருத்தை மையமாக வைத்தே இப்படியொரு அட்டகாசமான படத்தை அருவி இயக்குநர் இயக்கி உள்ளார். நாளைக்கி அது நாளைக்கி எனு வசனம் டிரெண்டாகி வருகிறது.

திவா தவான்
பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரின் காதலி என கிசுகிசுக்கப்படுவர் தான் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள திவா தவான். கார்னியர் விளம்பரங்களிலும் இவர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். போல்டான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார்.

டிராவல் மூவி
வாழ் திரைப்படத்தின் விஷுவல்ஸ் பற்றித் தான் பலரும் மெய்சிலிர்த்து பேசி வருகின்றனர். ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட்டுக்கு தேசிய விருதும் கிடைக்கும் என பலரும் பாராட்டி வருகின்றனர். வாழ் ரொம்பவே நல்லா இருக்கு, அருமையான டிராவல் படம் என இந்த நெட்டிசன் மார்க் போட்டுள்ளார்.

பார்க்க போறோம்
நள்ளிரவு வந்த வாழ் படத்தை நள்ளிரவே விழித்திருந்து வெறித்தனமான ரசிகர்கள், விமர்சகர்கள் பார்த்து முடித்த நிலையில், பொது மக்கள் இனிமேல் தான் படத்தை பார்க்கப் போகிறோம் என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வாழ் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.