சென்னை: சென்னையில் ஓரிரு மணி நேரங்கள் தூரல் போட்டுவிட்டு பின்னர் மழை நின்றுவிடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வதைத்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
நேற்று மாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கூடிய மழை சென்னையில் கொட்டியது.
நொளம்பூர்
தி நகர், கிண்டி, சைதாப்பேட்டை, முகப்பேர், நொளம்பூர், அம்பத்தூர், பூந்தமல்லி, அமைந்தகரை, கோயம்பேடு, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியை இந்த மழை ஏற்படுத்தியது.
பிரதீப் ஜான்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சென்னையில் இரவு நேரம் மழை பெய்தது. மேகக் கூட்டங்கள் கடலை நோக்கி நகர்ந்துவிட்டன. எனவே அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு சாரல் மழை பெய்துவிட்டு பின்னர் மழை நின்றுவிடும்.
வெயில்
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 50 மி.மீ. மழையும், செம்பரம்பாக்கம், மேற்கு தாம்பரத்தில் தலா 32 மி.மீ., வில்லிவாக்கத்தில் 25 செ.மீ., தரமணியில் 24 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் நந்தனத்தில் 15 மி.மீ., மாதவரம், சென்ட்ரலில் தலா 12 மி.மீ. மழை பெய்துள்ளது.
குறைந்தபட்ச மழை
வள்ளுவர் கோட்டத்தில் 19 மி.மீ., முகலிவாக்கத்தில் 14 மி.மீ., 12 ஆவது பிரதான சாலை அண்ணா நகரில் 13 மி.மீ. அம்பத்தூர், சோழிங்கநல்லூர், கத்திவாக்கத்தில் தலா 12 மி.மீ. மழையும் ராயபுரம், வளசரவாக்கம், திருவிக நகர், அண்ணா நகர் மேற்கு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ மழையும் பெய்துள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துளளார். இன்று மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.