Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழப்பு!

1290281

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சூரல்மலை கிராமத்தில் நீது ஜோஜோ என்ற பெண் வசித்து வந்தார். 30-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து தூக்கத்திலிருந்து விழித்த அவர், தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (விம்ஸ்) தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, தீயணைப்புத் துறையை தொடர்புகொண்ட விம்ஸ் நிர்வாகத்தினர் மீட்புக் குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதான் நிலச்சரிவு தொடர்பாக மீட்புக் குழுவுக்கு கிடைத்த முதல் தகவல் என கூறப்படுகிறது.

எனினும், சூரல்மலையில் நிலச்சரிவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆங்காங்கே மரங்கள் சாலையில் சாய்திருந்தன. மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இதனால் மீட்புக் குழுவினரால் விரைவாக செல்ல முடியவில்லை. இதற்கு நடுவே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புக்குழுவினர் அங்கு செல்வதற்குள் நீது மண்ணில் புதைந்துள்ளார். அவருடைய உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp