Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..

gold5406-1656667250

தங்கம் விலையானது இன்று சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது பலத்த சரிவில் காணப்படுகின்றது.

கடந்த அமர்வில் தங்கம் விலையானது 9 மாத சரிவில் காணப்பட்டது. தற்போது சற்று ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், ஆபரணத் தங்கத்தின் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது.

பணவீக்க அச்சம்

தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது அதிகரித்து வரும் நிலையில் பணவீக்கமானது உச்சம் தொட்டு வருகின்றது. இது ரெசசனுக்கு வழிவகுத்து வருகின்றது எனலாம். அமெரிக்கா முதல் இங்கிலாந்து வரையில் பல நாடுகளிலும் ரெசசன் வரலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம்.

முதலீடுகள் வெளியேற்றம் அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. ஆக இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன.

வட்டி விகிதம் அதிகரிக்குமா? தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் இருளடைந்த நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளது. சொல்லப்போனால் இது உலகளாவிய அளவில் ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.

கொரோனா அச்சம் சீனா மற்றும் இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.இது மேற்கொண்டு தேவையினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்? தங்கம் விலையியானது தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.45 டாலர்கள் அதிகரித்து, 1742.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதனை போலவே, வெள்ளி விலையும் 0.66% அதிகரித்து, 19.285 டாலராக காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 166 ரூபாய் அதிகரித்து, 50,670 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலை கிலோவுக்கு 267 ரூபாய் அதிகரித்து, 56,993 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து, 4740 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து, 37,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து, 5171 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,368 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,710 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம் ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 10 பைசா குறைந்து, 62.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 642 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 64,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?   22 கேரட் தங்கம் விலை (10 கிராம்) சென்னையில் இன்று – ரூ.46,720 மும்பை – ரூ.46,850 டெல்லி – ரூ.46,850 பெங்களூர் – 46,880

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp