Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

தமிழக அரசின் ஊழல் பட்டியல்.. 2 அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும்: அண்ணாமலை பேட்டி

download-9

சமூக நீதி பற்றி நேற்று முதலமைச்சர் பேசுகிறார் அதே மேடையில் ராஜகண்ணப்பனை பற்றி பேசி இருக்க வேண்டும்., அவர்கள் அமைச்சர்கள்,

தமிழகத்தில் ஊழல் குறித்து ஒரு வாரத்தில் பட்டியல் வெளியிடப்படும் என்றும் இரண்டு அமைச்சர்கள் பற்றிய ஆதாரத்தை வெளியிட உள்ளோம் என்றும் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும் என கூறியுள்ளார்.

அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் அவர் பேசியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  முதலமைச்சர் மேடையில் பேசுவது திமுக அரசியல் மேடைப்பேச்சாக இருந்தது.

சமூக நீதி பற்றி நேற்று முதலமைச்சர் பேசுகிறார் அதே மேடையில் ராஜகண்ணப்பனை பற்றி பேசி இருக்க வேண்டும்., அவர்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட்டார்கள் அவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பதை முதலமைச்சர் அதே மேடையில் சொல்லியிருக்க வேண்டும். 2021ல் அண்டை மாநிலமான கர்நாடகம் தமிழகத்தை விட 6மடங்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு அப்படி எந்த ஒரு பெரிய முதலீடும் வரவில்லை.இது தான் திராவிட மாடலா ?என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

மேலும், “வருவாய் இழப்பு யாருக்கு ஏற்பட்டுள்ளது ? எதை சொல்கிறார் ? காங்கிரஸ் ஆட்சிகாலத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக 2014 ல் இருந்து 2021 வரை தமிழகத்திற்கு வரி வருவாயை மத்திய அரசு கொடுத்துள்ளது என்றும்,ஜி.எஸ்.டி.கவுன்சில் என்ன முடிவு எடுத்து நிதி கொடுக்கிறது – அதில் பிரதமரோ அமைச்சரோ தலையிட முடியாது இது முதல்வருக்கு தெரியுமா தெரியாதா ?

இதையும் படிங்க: முதல்வரின் பேச்சு தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பேசியதை போல் இருந்தது.. அண்ணாமலை விமர்சனம்!
25 ஆயிரம் கோடி ரூபாய் – தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலை அதை ஏன் முதல்வர் மறைக்கிறார்.அதைப் பற்றி அவர் ஏன் பேசவில்லை. கச்சத்தீவை உங்களால் மீட்டெடுக்க முடியாது ! அதை வைத்து ஏன் நாடகம் ஆடுகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழை வைத்து., அடிப்படை கல்வியாக கொண்டுவர முடியாமல் இருக்கிறார்கள், என் இதை உங்களால் செய்ய முடியவில்லை’ என வரிசையாக குற்றச்சாட்டை அடுக்கினார்.

மேலும் படிக்க:360 டிகிரி எப்புடி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்
தமிழகத்தில் அமைச்சர்கள் ஊழல் குறித்து ஒரு வாரத்தில் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்த அண்ணாமலை இரண்டு துறை அமைச்சர்கள் பற்றிய ஆதாரத்தை வெளியிட உள்ளோம்.இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும் எனவும் கூறினார். இதேபோல், தமிழ்தாய் வாழ்த்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது தொடர்பான கேள்விக்கு,  தொழில்நுட்பக் கோளாறு., Link பிரச்சனை காரணமாக நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்க வேண்டும் அதை தவிர வேறொன்றும் இருக்காது என அண்ணாமலை பதிலளித்தார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp