Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

செம சரிவில் தங்கம்

gold-5

ரூ.10,000-க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இனி எப்படியிருக்கும்.. !

தங்கம் விலையானது கடந்த இரண்டு அமர்வுகளாகவே செம சரிவில் காணப்பட்ட நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது இன்னும் விலை குறையுமா? இன்று எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டமாக பார்க்கப்படும் தங்கமானது, வர்த்தகர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகிறது. இது விலை இன்னும் குறையுமா? அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? முக்கிய லெவல்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு..!

தங்கம் விலை குறையலாம் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக நேற்று பலத்த சரிவினைக் கண்ட நிலையில், 1800 டாலர்களுக்கு கீழாகவே வர்த்தகமாகியது. சொல்லப்போனால் நேற்று 1745.50 டாலர்கள் வரையில் சென்ற தங்கம் விலையானது, முடிவில் 1756.70 டாலர்களாக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றும் 1754.30 டாலர்களாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ரூபாய், டாலர் Vs தங்கம் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில் சரிந்த நிலையில், இந்திய சந்தையில் அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய சந்தையில் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. இதுவும் தங்கத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது இன்னும் தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல் என்ன தங்கத்தின் முக்கிய லெவலாக அவுன்ஸூக்கு 1835 டாலர்களை உடைத்தால் சற்று அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், கடந்த சில அமர்வுகளாக அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. இது இன்னும் செல்லிங் பிரஷரிலேயே உள்ளதையே காட்டுகின்றது. ஆக தங்கம் விலையானது இன்னும் சற்று குறையலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தங்கம் வட்டியில்லா முதலீடு அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது வட்டி விகிதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ,மேலும் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

முதலீட்டாளர்கள் கவனம் தங்க வர்த்தகர்கள் இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் ஈசிபி கூட்டத்தில், பணவீக்கம் பற்றிய கவலைகளை எழுப்பலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து பத்திரம் வாங்குதல் பற்றிய அறிவிப்பினை கொடுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது

காமெக்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இரண்டு நாட்களாக பலத்த சரிவினைக் கண்ட நிலையயில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 4 டாலர்கள் அதிகரித்து, 1760.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே பலத்த சரிவினைக் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று மீண்டும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தான் தொடங்கியுள்ளது. இது தற்போது சற்று அதிகரித்து, 22.933 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது

எம்சிஎக்ஸ் தங்கம் விலை இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 46,068 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதோடு கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 10,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமே.

இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 61,18 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 65 ரூபாய் குறைந்து, 4,365 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து, 34,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது 35,000 ரூபாய்க்கு கீழாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 71 ரூபாய் குறைந்து, 4,762 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 568 ரூபாய் குறைந்து, 38,096 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 2.30 பைசா குறைந்து, 65.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 2,300 ரூபாய் குறைந்து, 65,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளி விலையானது, இன்று குறைந்துள்ளது.

இன்று என்ன செய்யலாம்? நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. விலை குறையும் போது வாங்கினால் லாபம் சற்று அதிகமானதாக இருக்கும். மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதே சமயம் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

l

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp