தமிழக பட்ஜெட் அறிக்கையினை தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பல அதிரடியான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று பலரின் கவனம் ஈர்த்தது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைப்பு தான்.
இந்தியாவில் சமீபத்திய மாதங்களாக பெட் ரோல் டீசல் விலையானது கட்டுகடங்காமல் சென்று கொண்டுள்ளது. சொல்லப்போனால் 100 ரூபாயினை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கு ஒரு புறம் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ஒரு காரணமும் என்றாலும், மறுபுறம் எரிபொருட்கள் மீதான வரியும் முக்கிய காரணம். ஏனெனில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது பலத்த வீழ்ச்சியினை கண்டபோது கூட, அதன் பலன் இந்திய மக்களுக்கு கிடைக்கவில்லை எனலாம்.
உற்பத்தி குறைப்பு
இந்த விலையின இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கொரோனா காலத்தில், அதளபாதாளத்தில் இருந்த எண்ணெய் விலையை மீட்க, ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை வெகுவாக குறைத்தன. இதனால் சந்தையில் எண்ணெய் வரத்து குறைந்தது. இதனால் எண்ணெய் விலையானது கட்டுக்குள் வந்தது. பெரும் சரிவு அந்த நேரத்தில் தடுக்கப்பட்டது.
தேவை அதிகரிப்பு
ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் தேவையானது அதிகரித்துக் கொண்டுள்ளது. ஆனால் இப்படி நிலையிலும் கூட, கச்சா எண்ணெய் உற்பத்தியினை எண்ணெய் நாடுகள் அதிகரிக்கவில்லை.
மக்களின் கோரிக்கை
இதனால் தற்போது கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலையானது கட்டுக்குள் வரவில்லை. மேலும் அதிகரித்து கொண்டே சென்று கொண்டுள்ளது. இதற்கிடையில் பெட்ரோல் டீசல் மீதான வரியினை குறைக்க பல கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி மொத்தம் லிட்டருக்கு 32.98 ரூபாயாகவும், இதே டீசலுக்கு, லிட்டருக்கு 31.83 ரூபாயும் உள்ளது.
பெட்ரோல் வரி குறைப்பு
இந்த பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக பெட்ரோல் மீதான வரி குறைப்பு பார்க்கப்படுகிறது. இது லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக்கத்தில் பெட்ரோல் விலையானது 100 ரூபாய்க்கும் கீழாக குறைய வாய்ப்புள்ளது. இது சாமனியர்களுக்கு மிக நல்லதொரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.