Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

62 ஆண்டுகள்.. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று அங்கே வசிப்பது போன்றது..கமலை கொண்டாடும் ரசிகாஸ்!

kamal223-1579788675-1628488352

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது சினிமா பயணத்தை தொடங்கி 62 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ரசிகர்கள் #62yearsofKamalism என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து குழந்தை நட்சரத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய கமல் 62 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகனாக வலம் வருகிறார்.

நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், பிலிம் ஃபேர், தேசிய விருதுகள், பத்ம விருதுகள் என அள்ளிக் குவித்திருக்கிறார். இன்னமும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு எழுத்து, இயக்கம் என பிஸியாக இருந்து வருகிறார்.

விக்ரம் படக்குழு வெளியிட்ட டிபி

அரசியலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வரும் கமல், நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டார். இந்நிலையில் சினிமாவில் கமலின் 62 ஆண்டுகள் சாதனையை கவுரவிக்கும் வகையில் விக்ரம் படக்குழுவினர் நேற்று காமன் டிபியை வெளியிட்டனர்.

கையில் ரத்தக்கறை படிந்த வாள்

அதில் Once A lion is Always a lion என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும் கமல் கையில் ரத்தக்கறை படிந்த வாளுடன் இருக்கும் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. இந்த டிபி பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கமலின் 62 ஆண்டு சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் நெட்டிசன்கள் #62yearsofKamalism என்ற ஹேண்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்

இந்த ரசிகர் கமல்ஹாசன் இன்று 62 ஆண்டு விழாவை சினிமாவில் கொண்டாடுகிறார். களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் அறிமுகமான உலகநாயகன் பெரிய திரையில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். அவரது புகழ்பெற்ற வாழ்க்கை இன்னும் வலுவாகவும் நிலையானதாகவும் செல்ல வேண்டும் என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

ஆக்ஷன் பேக்டு மூவி

மற்றொரு ரசிகரான இந்த நெட்டிசன், கமல் ஹாசனும் தளபதி விஜய்யும் சேர்ந்து முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை கொடுக்க வேண்டும். அப்பா மகன் கதாப்பாத்திரத்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் அதை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கமல் சார் தி பாஸ்

மற்றொரு ரசிகையான இவர் விக்ரம் பட டிபியை பகிர்ந்து கமல் ஹாசன் சாரின் 62 ஆண்டுகள்.. கமல் சார் தி பாஸ் என பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் கமலின் விருமாண்டி, விஸ்வரூபம் உட்பட பல்வேறு படங்களின் போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலக நாயகனின் பயணம்

மற்றொரு ரசிகரான இவர் நடிகராக 62 ஆண்டுகள்.. 62 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் பெருமை.. 62 ஆண்டுகள் உலக நாயகனின் பயணம் என பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பெருமை

மற்றொரு ரசிகரான இந்த நெட்டிசன், மைக்கேல் மதன காமராஜன் படத்தின் ஒரு காட்சியை பகிர்ந்து இந்த ஃபிரேம் 1991ஆம் ஆண்டில் எடுக்கப்படுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இது மட்டும் அல்ல எவ்வளவோ இவர் புதுசா ட்ரை பண்ணியிருக்கார்.. கமல்ஹாசன் சார் தமிழ் சினிமாவின் பெருமை என பதிவிட்டுள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று

கலையுலகில் 62 ஆண்டு காலம் தொடர் பயணம் என்பது கிட்டத்தட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று அங்கே வசிப்பது போன்றது. அரை நூற்றாண்டு கடந்த தங்களின் கலைப்பயணம் சதமடிக்க வாழ்த்துகள் நம்மவரே என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.



சினிமாவின் எல்லா துறையிலும்

மற்றொரு ரசிகரான இவர், 6 மொழிகள், 200க்கும் மேற்பட்ட படங்கள், எண்ணிலடங்கா விருதுகள், நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தாயரிப்பாளர், டான்சர், பாடகர்… என சினிமாவின் எல்லா துறையிலும் தனது தடத்தை பதிவு செய்துள்ளார் உலக நாயகன் கமல் என பதிவிட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் 100 ஆண்டுகள்

இந்திய சினிமாவின் 100 ஆண்டுகள் கமலின் 62 வருட பங்களிப்பு இல்லாமல் இருக்காது. இந்த லிவிங் லெஜன்ட்டை கொண்டிருப்பது இந்திய சினிமாவின் பாக்கியம்! களத்தூர் கண்ணம்மா படத்திற்கே குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்றவர் என புகழ்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp