Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

“அவருக்கு” குறி வைத்த பாஜக.. டெல்லிக்கும் வர சொல்ல போகுதாமே.. ஒரே பிளானில் 3 மாங்காய்கள்.. நடக்குமா?

sasikalaa412-1625881631

சென்னை: அதிமுகவுக்கு மறைமுகமாக செக் வைக்க பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது.. அந்த வகையில், தினகரன் குறித்த ஒரு செய்தி கசிந்துவருகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், தமிழக களம் தகிக்க தொடங்கி விட்டது..!

தினகரனை பொறுத்தவரை, மிக தேர்ந்த அரசியல்வாதி.. நுணுக்கம் தெரிந்தவர்.. கடந்த முறை தேர்தலில் எப்படியாவது 3வது இடத்தை தக்க வைத்து விடுவார் என்று கணிக்கப்பட்டது..

இதற்கு காரணம், கூட்டணியில் எஸ்டிபிஐ, ஓவைசி இருக்கும் பட்சத்தில் அமமுகவுக்கு ஓரளவு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் வழக்கத்துக்கு அதிகமாகவே விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறுபான்மை

சிறுபான்மையினர் ஓட்டுக்களை எவ்வளவுக்கெவ்வளவு அமமுக பிரிக்கிறதோ, அது அப்படியே திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள்தான் என்றும் சொல்லப்பட்டது.. இதைதான் பாஜகவும் எதிர்பார்த்தது.. ஒருவேளை ஓட்டு வங்கி தினகரனுக்கு அதிகமானால், இதை வைத்து வேறு விதமான காய்நகர்த்தல்களை ஆரம்பிக்க பிளான் செய்திருந்தது.. ஆனால் எல்லாமே சொதப்பலாகிவிட்டது.. கடந்த முறை தேர்தலில் 5 சதவீதம் வாக்கு வங்கியை தக்க வைத்த தினகரனால் இந்த முறை 2.5. சதவீதத்தையே பெற முடிந்தது..

தினகரன்

இதற்கு பிறகு தினகரன் அமைதியாகவே ஒதுங்கி இருந்தாலும், அடுத்த சில தினங்களில் தீவிரமாக அரசியல் செய்ய தயாராகி கொண்டிருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக மேலிடம் தினகரனை அழைத்து பேசக்கூடும் என்று ஒரு தகவல் கசிந்து வருகிறது.. சென்ற முறை தேர்தலுக்கு முன்பும் இப்படித்தான் தினகரன் டெல்லி சென்று வந்தார்.. அவர் அங்கு போய் வந்ததில் இருந்தே கப்சிப்தான்..

பாஜக

அமமுக நிர்வாகிகளிடம் பேசும்போதுகூட, நமக்கு குறி திமுகதான்.. தேவையில்லாமல் பாஜகவை சீண்ட வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு போட்டதாக கூறப்பட்டது. இப்போதும் டெல்லியில் இருந்து விரைவில் தினகரனுக்கு அழைப்பு வரலாம் என்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஆனால், சசிகலா ஆடியோ தொடர்பாக இருக்கலாம் என்று தெரிகிறது.. சசிகலாவின் ஆடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாவதுடன், அதிமுக தலைமையை கிறுகிறுக்க வைத்து வருகிறது..

அசால்ட்

ஆரம்பத்தில் அசால்ட்டாக இதை எடப்பாடி எடுத்து கொண்டாலும், இந்த ஆடியோ விவகாரமே அவருக்கு தலைவலியை தந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.. ஆனால், தமிழ் ஊடகங்களிலும் சசிகலாவின் பேட்டி மற்றும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பாஜக மேல்மட்டத்திலிருந்து சொல்லப்படுகிறதாம்.

ஓபிஎஸ்

சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் டெல்லி சென்றபோதே, இந்த விஷயம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாம். இதையடுத்து விரைவில் தினகரனை டில்லிக்கு அழைத்துப் பேச பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.. தினகரன் பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு இந்த விவகாரம் குறித்து அமித்ஷா விரைவில் ஒரு முடிவு எடுப்பார் என்கின்றனர் பாஜக தரப்பினர்.

2 விஷயங்கள்

இந்த தகவலால் 2 விதமான விஷயங்கள் புலப்படுகிறது.. ஒன்று, சசிகலாவை பாஜக தரப்பு லேசில் விட்டு விட தயாராக இல்லை.. சசிகலா இருந்தால், தென்மண்டலங்களில் அதிமுகவின் செல்வாக்கை பெருக்கி, அதன்மூலம் தங்கள் காரியங்களை சாதிக்கலாம் என்ற பாஜகவின் நீண்ட நாள் திட்டம் தற்போதும் உள்ளதாகவே தெரிகிறது.. சசிகலாவை வைத்தே இரட்டை தலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் பாஜக மும்முரமாகவே உள்ளதாக தெரிகிறது..

பாஜக

அதேசமயம், பாஜக எடுக்கும் முயற்சிகள் எந்த வகையிலும் தினகரனையும் பாதிக்கும் என்று சொல்லிவிட முடியாது.. தினகரனை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் இணக்கமான போக்கை கையாள தயாராகவே இருக்கிறார்.. கடந்த எம்பி தேர்தலின்போது, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்றார்.. இதைநம்பிதான் ஒவைசி போன்ற இஸ்லாமிய கட்சிகளும் இந்த சட்டமன்ற தேர்தலில் நம்பி கூட்டணி வைத்தன.. ஆனால், “நாங்க ஒன்றும் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லவில்லையே” என்று ஒரே போடாக போட்டு சிறுபான்மையினருக்கே ஜெர்க் தந்தார் தினகரன்.

இணக்கம்

எனவே, இந்த முறையாவது பாஜகவுடன் இணக்கமாக செல்வாரா? அப்படி இணையும் பட்சத்தில் அதிமுகவுக்கு எந்த மாதிரியான நெருக்கடியை பாஜக தரப்போகிறது? இதை வைத்து திமுகவுக்கு எந்த மாதிரியான செக் வைக்க போகிறது? சசிகலாவின் ஆடியோவால் மட்டுமே எல்லாம் சாத்தியமாகிவிடுமா? அப்படியே சசிகலா கட்சிக்குள் வந்தாலும், அதைவைத்து பாஜக தமிழகத்தில் காலூன்றிவிடுமா? என்றெல்லாம் சந்தேகங்கள்தான்..

சசிகலா

ஆனால், சசிகலாவை வைத்தே அதிமுகவின் பலத்தை குறைப்பது, அதைவைத்து திமுகவுக்கு கிலி ஏற்படுத்துவது, அதைவைத்து, தன் காரியங்களை சாதிப்பது என்ற 3விதமான மூவ்களை பாஜக யோசிப்பதாக தெரிகிறது.. எப்படி பார்த்தாலும், தினகரன் டெல்லி பயணம் என்பது மிகப்பெரிய மாறுதல்களை தமிழக அரசியலில் ஏற்படுத்தக்கூடும் என்று மட்டும் தெரிகிறது.. பார்ப்போம்..!

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp