மும்பை: ஹாட்ஷாட் செயலிக்காக நடிக்க மறுத்ததால் தனது தொலைபேசி எண்ணை ராஜ் குந்த்ரா லீக் செய்து விட்டதாக நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு கோடி கணக்கில் சம்பாதித்துள்ளார்.
இதுதொடர்பான புகாரில் கடந்த திங்கள் கிழமை இரவு கைது செய்யப்பட்டார் ராஜ் குந்த்ர, அவருக்கு 3 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கப்பட்டது.
பல்வேறு பிரிவுகளில் வழக்கு
இந்த புகார் தொடர்பாக கடந்த வாரமே 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போதுமான ஆதாரங்களுக்காக காத்திருந்த மும்பை போலீசார் ராஜ் குந்த்ராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது மோசடி, ஏமாற்றுதல், ஆபாச செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்மன் அனுப்பப்படவில்லை
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் ராஜ் குந்த்ராவின் ஆபாசப்பட தொழிலுக்கும் அவரது மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிகிறது. மேலும் இதுவரை அந்த வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை.
கென்ரின் நிறுவனத்திடம் விசாரணை
போலீசார் ராஜ் குந்த்ராவின் வியான் நிறுவனம் மற்றும் லண்டனில் செயல்பட்டு வரும் அவரது மைத்துனருக்கு சொந்தமான கென்ரின் நிறுவனத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கென்ரின் நிறுவனத்தின் மூலம் தான் ஆபாச படங்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன என்பதால் அந்நிறுவனத்திடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
என்னையும் அழைத்தார்
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே, ராஜ் குந்த்ரா மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதாவது ராஜ் குந்த்ரா தன்னுடைய ஹாட்ஷாட் செயலில் நடிக்க தன்னை அழைத்தார் என்றும் அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
நம்பரை லீக் செய்துவிட்டார்
மேலும் தான் மறுத்ததால் தகாத மெஸேஜ்களுடன் தன்னுடைய தொலைபேசி நம்பரை லீக் செய்து விட்டார் என்றும் கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா மற்றும் அவரது அசோசியேட்ஸ் தன்னுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தனது கன்டென்ட்டை பயன்படுத்தி வருவதாக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.