சென்னை: ஏஆர் ரஹ்மானை யாரென்று கேட்ட நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர். தெலுங்கு சினிமிவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா. சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஆக்டிவாக உளளார் பாலகிருஷ்ணா.
மறைந்த நடிகர் என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி பிரச்சனையில் சிக்கி வருகிறார்.
ஏஆர் ரஹ்மான் யாரு?
அந்த வகையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மானை யார் என்று கேட்டார். அதோடு பாரத ரத்னா போன்ற விருதுகள் எல்லாம் என் அப்பாவின் கால் விரலுக்கும், என் காலுக்கும் சமம் என்றார்.
பாலகிருஷ்ணா வீடியோ
மேலும் தன்னை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் ஒப்பிட்ட பாலகிருஷ்ணா, அவரை போன்று தாமதிக்காமல் விரைந்து படங்களை முடிக்க விரும்புவதாக கூறினார். பாலகிருஷ்ணா பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
யாரு பாலகிருஷ்ணா?
இதனை பார்த்த ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் பாலகிருஷ்ணாவை ஒரு காமெடியன் என விமர்சித்து வருகின்றனர். மேலும் ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மானை யார் என்று கேட்ட பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் #WhoIsBalakrishna? என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
இந்திய அளவில் ட்ரென்டிங்கில்
இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. அதோடு பாலகிருஷ்ணாவின் ட்ரோல் வீடியோக்களையும் ஷேர் செய்து லெஜன்ட் என கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அப்பாவின் பெயரை சொல்லி
மேலும் ஏஆர் ரஹ்மான் யார் என்று தெரிந்திருந்தால் பாலகிருஷ்ணா எப்போதோ ஹீரோவாகியிருப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர். பலரும் அப்பாவின் பெயரை சொல்லி நடிப்பு என்கிற பெயரில் மக்களை கொடுமை படுத்துபவர்தான் பாலகிருஷ்ணா என்றும் விளாசி வருகின்றனர்.