சென்னை: 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். மாணவர்கள் எளிதாக மதிப்பெண்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இந்த முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் மாணவர்கள் தேர்வு ரிசல்ட் பார்க்க வேண்டும் என்றால் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று அங்கு கருப்பு போர்டில் ஒட்டப்பட்டு இருக்கும் தேர்வு முடிவு பட்டியலை பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதன்பின் மாணவர்களுக்கு நேராக போஸ்டிலேயே ரிசல்ட் வரும் வசதிகள் செய்யப்பட்டன.
ஆனால் அப்போதெல்லாம் கூட ரிசல்ட் வந்து இரண்டு நாள், மூன்று நாள் கழித்துதான் மாணவர்கள் பாஸா, பெயிலா என்பதையே தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அதன்பின் இணையம் மூலமாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இணையம்
இணையத்தில் பள்ளி கல்வித்துறை தளத்திலேயே ரிசல்ட்டை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது நேரடியாக மாணவர்களின் போன்களுக்கே ரிசல்ட் அனுப்பும் வசதியை அரசு கொண்டு வந்துள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எப்படி
இந்த தளத்திற்கு சென்று மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் எளிதாக தங்கள் தேர்வு முடிவை பார்க்க முடியும். இந்த நிலையில் கூடுதலாக இன்னொரு வசதியையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நேராக மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவே முடிவுகள் அனுப்பப்படும்.
முடிவுகள்
ஏற்கனவே பள்ளிகள் மாணவர்கள் பதிவு செய்து வைத்து இருந்த அப்பா, அம்மா அல்லது கார்டியன் போன் எண்ணுக்கே இந்த முறை தேர்வு முடிவுகள் தானாக அனுப்பி வைக்கப்படும். இதற்கு நீங்கள் எந்த மெசேஜும் அனுப்பி வேண்டியது இல்லை. தானாக பதிவு செய்யப்பட்ட போன் எண்ணிற்கு மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு
ரிசல்ட்டிற்காக பல மணிநேரம் காத்திருந்த காலம் போய் எஸ்எம்எஸ்சிலேயே எளிதாக ரிசல்ட் பார்க்கும் வசதி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த முறை வெளியான +2 ரிசல்ட்டில், தேர்வு எழுதிய 8,16,473 பேரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பள்ளிக்கு வராத 1.656 பேர் தேர்ச்சி பெறவில்லை.
எத்தனை
ஆனால் இந்த +2 பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் +2 மதிப்பெண் முறையில் திருப்தி இல்லையெனில், பொதுத்தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.