டெல்லி: கன்வர் யாத்திரைக்கு அனுமதி தருவதை உத்தர பிரதேச அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
2 மாதத்துக்கு முன்பிருந்ததைவிட, நாட்டில் தற்போதுதொற்று மெல்ல குறைந்து வருகிறது.. எனினும், 3வது அலை வரப்போவதாக எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.. ஐஎம்ஏ என அழைக்கப்படும் மருத்துவர் சங்கமும் இந்த 3-வது அலை தொடர்பாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்தநிலையில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
யாத்திரை
இந்து கடவுளான சிவன் பக்தர்கள் 2 வாரம் நடத்துவது தான் கன்வர் யாத்திரை… இதற்காக பல பகுதிகளில் இருந்து ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் ஆண்டுதோறும் பாத யாத்திரையாக செல்வது வழக்கம்… அதன்படி, இந்த வருஷமும் ஜூலை 25 ம் தேதி இது தொடங்குவதாக இருந்தது.
உபி அரசு?
இப்படி பாத யாத்திரை செல்லும்போது, உத்தரகண்ட் உள்ளிட்ட இதர பகுதிகளிலிருந்து கங்கை புனித நீரைப் பக்தர்கள் சேகரிப்பார்கள்…ஆனால், கொரோனா பரவல் காரணமாக 2வது ஆண்டாக இப்போதும், கன்வர் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு ரத்து செய்தது… ஆனால் கொரொனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் 25ம் தேதி முதல் யாத்திரையைத் தொடங்கலாம் என்று அனுமதி வழங்கியது. உபி அரசு.. இதற்கான உத்தரவையும் அம்மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்திருந்தார்.
சுப்ரீம்கோர்ட்
ஆனால், கன்வர் யாத்திரையை இந்த ஆண்டும், இந்த யாத்திரையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான் கன்வர் யாத்திரை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது… இன்று மீண்டும் நீதிபதி ரோஹிந்தன் பாலி நாரிமன் அமர்வு முன் வந்தது.
விசாரணை
இந்த வழக்கு விசராணையின்போது மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது… கன்வர் யாத்திரை நடத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தது.. மேலும், மத்திய அரசு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.
கன்வர் யாத்திரை
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சொல்லும்போது, “கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரையை அனுமதிக்க வேண்டும்… கன்வர் யாத்திரைக்கு அனுமதி தருவதை உத்தர பிரதேச அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.. யாத்திரையில் எத்தனை பேருக்கு உத்தரபிரதேச அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும்? அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த அனுமதித்துள்ளதா என்பதையும் விளக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம்… மத உணர்வுகளை விட உடல் நலத்தை பாதுகாப்பதே முக்கிய அடிப்படை உரிமையாகும்.
நாட்டு மக்கள்
நாட்டு மக்களின் உடலநலனை பாதுகாப்பதே மிக முக்கியமான கடமை ஆகும். ஹரித்வார் சென்று கங்கை நீர் எடுத்துவரும் கன்வர் யாத்திரையை உபி அரசு அனுமதிக்கக் கூடாது. தாங்களகவே முன்வந்து கன்வர் யாத்திரைக்கு உத்தரபிரதேச அரசு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும்.. கொரோனா 3-வது அலையை தடுக்க மக்கள் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்… விதிமுறை மீறலை நாம் ஒரு சதவீதம் கூட அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.