காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் இந்திய துணை தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் 80 பேர் நேற்று முதல்நாள் மீட்கப்பட்டனர். இவர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக நேற்றே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மீட்பு ஆபரேஷனுக்காக இந்திய விமானப்படை திட்டங்களை வகுத்தது எப்படி என்ற கூடுதல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
சினிமாவிற்கு இணையாக.. படங்களில் காட்டுவது போல இரவோடு இரவாக இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இத்தனை நாட்கள் அமெரிக்காவின் மேற்பார்வையில் தாலிபான் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வேகமாக வெளியேறி
தாலிபான் படைகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க படைகள் வேகமாக வெளியேறி வருகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி இறுதிக்குள் மொத்தமாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை காலி செய்யும் என்று அதிபர் பிடன் அறிவித்துள்ளார்.
பிடன்
இந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறுவதை பயன்படுத்திக் கொண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வரும் விதமாக அங்கு தாலிபான்கள் வேகம் காட்டி வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மொத்தமாக “மீண்டும்” ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில கிமீ
இந்த நிலையில் இதுவரை 400 மாவட்டங்களில் 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தாலிபான் படைகள் வென்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் ராணுவமும் எதுவும் செய்ய முடியாமல் தாலிபானிடம் சரண்டர் ஆகி வருகிறது. தற்போது கந்தகார் அருகே தாலிபான் படைகள் நெருங்கி உள்ளது. கந்தகார் விமான நிலையத்தில் இருந்து 10 கிமீ தூரத்தில்தான் தாலிபான் படைகள் உள்ளன.
மீட்பு
இதையடுத்தே நேற்று முதல்நாள் தாலிபான் படைகளிடம் இருந்து காப்பாற்றும் விதமாக கந்தகார் இந்திய துணை தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் 80 பேர் மீட்கப்பட்டனர். இதற்காகவே இந்திய விமானப்படை சிறப்பான ஆபரேஷன் ஒன்றை நேற்று மேற்கொண்டு உள்ளது. நேற்று முதல் நாள் காலை இது தொடர்பான தகவல் இந்திய அரசுக்கு வந்துள்ளது. தாலிபான் படைகள் கந்தகாரை நெருங்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது.
தகவல்
அங்கு துணை தூதரகத்தில் இருப்பது இதற்கும் மேல் பாதுகாப்பு இல்லை. உடனே இவர்களை மீட்க வேண்டும் என்று தகவல் சென்றுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இந்தியா விமானப்படையை அனுப்புவது சிரமம். முக்கியமாக பாகிஸ்தான் வழியே விமானப்படையை அனுப்புவது தேவையில்லாத சர்ச்சைகள், விவாதங்களை ஏற்படுத்தும். பாதுகாப்பு ரீதியாகவும் இது சிக்கலை ஏற்படுத்தும்.
விமானப்படை
பாகிஸ்தான் இல்லாமல் எளிதாக சென்று வர வேண்டும் என்றால் காஷ்மீர் வழியாக சீனாவிற்குள் லேசாக நுழைந்து ஆப்கானிஸ்தான் செல்ல வேண்டும். அல்லது ஈரான் வழியாக செல்ல வேண்டும். சீனா வழியாக செல்வது மேலும் சிக்கல். இதற்காக நேற்று முதல் நாள் இரவோடு இரவாக இந்திய விமானப்படை ஈரான் வழியாக சென்றுள்ளது. ஈரானிடம் சிறப்பு அனுமதி வாங்கி இந்திய விமானப்படை இயங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பெஷல்
இந்திய விமானப்படை இரண்டு மூத்த விமானிகளை களமிறக்கி, சைலண்ட்டாக தாலிபானுக்கு தெரியாமல் கந்தகார் விமான நிலையம் சென்றுள்ளது. 2014ல் ஈராக்கில் சிக்கிய கேரள நர்ஸ்களை மீட்க இதேபோன்ற திக் திக் ஆப்ரேஷன் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை மேற்கொண்டு இருக்கும். இந்த கதை கூட மலையாளத்தில் டேக் ஆப் என்ற பெயரில் படமாக வெளியானது.
படம்
இந்த நிலையில் அதே போன்ற ஆபரேஷன் சத்தமின்றி ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து பாதுகாப்பான கார்களில் சத்தமின்றி 80 பேரும் விமான நிலையம் சென்றுள்ளனர். தரையிறங்கி 30 நிமிடத்தில் இந்திய அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை அங்கிருந்து திரும்பி உள்ளது. மிக முக்கியமான பைல்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, சில பைகள் “shread” செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவிற்கு கொண்டு வந்தனர்
பாகிஸ்தானுக்கும் தெரியாமல், தாலிபானுக்கும் தெரியாமல் 80 பேரை மிக பாதுகாப்பாக ஏர்போர்ஸ் அதிகாரிங்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். கந்தகாரில் உள்ள இந்திய அதிகாரிகள் வெளியேற்றப்பட்டாலும் கூட அங்கு துணை தூதரகம் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஊழியர்களுடன் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.