சென்னை: திமுகவில் ஒரு முக்கியமான விஷயம் கசிந்து வருகிறது.. அதுவும் கனிமொழி என்பவரின் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது.. யார் இந்த கனிமொழி? என்ன காரணம்?தமிழகத்தில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி காலியாக இருக்கிறது.. ஒரே சமயத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியானால், 2 இடங்களை திமுக கூட்டணியும் ஒரு இடத்தை அதிமுகவும் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது.
அல்லது தனித்தனியே வெளியானால் 3 இடங்களையுமே திமுகவே கைப்பற்றும்.. அப்படி தங்களுக்கு கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்காக திமுக விட்டு தரலாம் கொடுக்கலாம் என்கிறார்கள்
லிஸ்ட்
அப்படி ஒரு இடம் கிடைத்தால், தமிழகத்திலிருந்து குலாம் நபி ஆசாத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப காங்கிரஸ் தரப்பில் ஒரு யோசனை இருக்கிறது.. திமுக தரப்பிலிருந்து யாரை அனுப்புவது என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது. இதற்கு நிறைய பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன.. கொங்கு மண்டலத்தை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு நிறைய சான்ஸ் உள்ளதாம். காரணம், எஸ்வி வேலுமணிக்கு கடைசிவரை தொகுதிக்குள் டென்ஷனை ஏற்படுத்தியவர்.
ஓபிஎஸ்
ஸ்டாலினுக்கும் இவர் மீது நிறைய நல்ல அபிப்பிராயம் உள்ளதால், இவருக்கே வாய்ப்பு முதலில் உள்ளது. அதேபோல, தங்க தமிழ்செல்வனும் லிஸ்ட்டில் இரண்டாவதாக இருக்கிறார். இவரும் ஓபிஎஸ்ஸுக்கு டஃப் தந்தவர்தான்.. ஆனால், மாநிலங்களவையில் திமுக சார்பில் பெண்களும் இடம் பெற வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்..
அதிர்ச்சி
ஒருவேளை சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால் அவரை நிச்சயம் சபாநாயகர் அல்லது ராஜ்யசபா சீட் தந்திருப்பார் ஸ்டாலின்.. ஆனால் அவர் அதிர்ச்சி தோல்வி அடைந்துவிடவும், வேறு பெண் பிரதிநிதியை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.. அந்த வகையில்தான், டாக்டர் கனிமொழியின் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது.
யார் இந்த கனிமொழி?
ஆரம்பகால திமுகவின் அடிப்படை தூண்களில் ஒருவராக இருந்த என்வி.நடராஜனின் பேத்திதான் கனிமொழி.. இவர் ஒரு டாக்டர்.. இப்போது திமுகவின் மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கிறார்.. அத்துடன் செய்தித்தொடர்பாளராகவும் உள்ளார்.. கடந்த 2016-ல் எம்எல்ஏ தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்தான் கனிமொழி.. அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் இவருக்கு சீட் தரப்படாமலும், கட்சியால் கண்டுகொள்ளப்படாமலும் இருந்தது..
கனிமொழி
இந்நிலையில்தான், ஸ்டாலினிடமே தன் வருத்தத்தை கனிமொழி சொல்லி உள்ளதாக தெரிகிறது.. அதனால், அநேகமாக கனிமொழிக்கே இந்த பதவி கிடைக்கும் என்கிறார்கள். பெண்களுக்கான முக்கியத்துவம் மாநிலங்களவையில் தருவதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதால், இந்த பதவி டாக்டர் கனிமொழிக்கு செல்ல நிறைய வாய்ப்புள்ளதாம்.. பார்ப்போம்..!