சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் திரு.ஜோஷி இவர் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் ஜோஷி ஜெய்சிங் என்ற பெயரில் முகநூல் பக்கம் வைத்திருக்கிறார்.நேற்று அவர் கைபேசி எடுத்து பார்க்கும் போது அதிர்ச்சி காத்திருந்தது.
நண்பர்கள்
அவருடைய நண்பர்கள் பலர் அவருக்கு கைபேசியில் அழைப்பு விடுத்ததை பார்த்து அதிர்ந்துபோனார் பிறகு விசாரித்த பொழுது அவருடைய முகநூல் பக்கத்தில் இருந்து அவருடைய நண்பர்களுக்கு எனக்கு உடல் நிலை சரி இல்லை எனக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை ரூ10000 வேண்டும் என குறுஞ்செய்திகள் வந்து இருக்கின்றன.
அச்சடித்தார் போல் நகல்
பிறகு ஜோஷி இதை பற்றி ஆராய்ந்து பார்க்கையில் அவருடைய முகநூல் போலவே மற்றொரு முகநூல் உருவாக்கப்பட்டு உள்ளது.கொஞ்சம் கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.
வடகன்ஸ்
ஜோஷியின் நண்பர்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் அனைத்திலும் ஹிந்தி கலந்து அனுப்பப்பட்டு இருந்ததது.அவர்களுக்கு போன் பே(phone pay) எண் ஒன்றும் அனுப்பப்பட்டு இருந்தது.
வடகன்ஸ் விட நம்ப ஆளுங்க ரொம்ப உஷார்
ஜோஷியின் நண்பர்கள் அவனை கலாய்த்ததிலும் அவனை திட்டியதிலும் அவன் அந்த முகநூல் பக்கத்தை அழித்துவிட்டே ஓடிவிட்டான்.