சென்னை: நீலகிரி, கோவை, தேனி, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய உள் மாவட்டங்களிலும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. ரிஷிவந்தியத்தில் 11 செமீ மழையும், திருவையாறு, ஊத்தங்கரை, நந்தியார் ஹெட்
உள் தமிழ்நாடு முதல் மன்னார் வளைகுடா வரை 1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் மழை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி,வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய உள் மாவட்டங்களிலும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
பருவமழை தீவிரம்
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதன் காரணமாக 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றுட் ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிக மிக கனமழை
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மலைப்பகுதிகளில் மண் சரிவுக்கு வாய்ப்பு உள்ளது எனவே மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இடி மின்னல் காற்று
சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வனிலை மையம் அறிவித்துள்ளது. 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளா, அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு இந்த கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.