டெல்லி: மத்திய அரசின் “தவறான முடிவுகள்” காரணமாக கொரோனா (கோவிட் -19 ) நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது சுமார் 50 லட்சம் இந்தியர்கள் இறந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டில் இதுவரை 4.18 லட்சம் பேர் கொரோனா நோயால் இறந்துள்ளதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
ஆனால் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் “சென்டர் ஃபார் குலோபல் டெவலெப்மென்ட்” நடத்திய புதிய ஆய்வை பகிர்ந்து இருந்தார். இந்த ஆய்வை மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார வல்லுநர்கள் அபிஷேக் ஆனந்த், ஜஸ்டின் சான்டபர் ஆகியோர் இணைந்து நடத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இது தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து ஜூன் 2021 வரை மூன்று வெவ்வேறு தரவு மூலங்களை ஆய்வு செய்து அதிக இறப்புகள் நடந்தததாக பதிவு செய்திருந்தது. அதை ரீடுவிட் செய்த ராகுல் காந்தி, அதற்கு மேல் “உண்மை. கொரோனா இரண்டாவது அலையின் போது இந்திய அரசின் தவறான முடிவுகள் காரணமாக எங்களின் 50 லட்சம் சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு எந்த இழப்பீடும் தேவையில்லை என்று கூறியி மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.
“விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும் எந்தவிதமான இழப்பீடும் இல்லை. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் கண்ணீரில்தான் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று இந்தியில் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில் ‘விவசாயிகள் போராட்டம்’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி உள்ளார்.