Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் சிறுமியின் அண்ணன் கைது

Kaniyakumari-Rape-Case

கன்னியாகுமரி: நித்திரவிளை அருகே 17 வயது சிறுமியை அவரது சகோதரனே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகலாந்து மாநிலத்தை சேர்ந்தவர் போங்கு வாண்ட்(35 ). இவர் குமரிமாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள மேற்கு கடற்கரை சாலை பகுதியில் தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக நித்திரவிளை காஞ்சாபுறம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருடன் திருவனந்தரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனக்கு சில நாட்களாக தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக தெரிவித்த அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிறுமி மற்றும் அவருடன் வந்த வாலிபரை மருத்துவர்கள் அருகிலுள்ள அறையில் தங்க வைத்தனர்.

கர்ப்பமாக இருந்தவர் 18 வயது குறைவானவர் என்பதால் இதுகுறித்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு அந்த சிறுமியை மீட்டனர். அவர் கர்ப்பம் ஆனதற்கு காரணம் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வாலிபர் தான் காரணம் என்றும் அவர், சிறுமியின் சகோதரர் என்பதும் தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகளிர் போலீசார் சிறுமி மற்றும் அவரது சகோதரரை குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர். குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சிறுமி பலமுறை சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. சகோதரியே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போங்குவாண்டுக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் நாகலாந்தில் உள்ளனர். இந்நிலையில் அவரை பார்க்க சகோதரியான சிறுமி நித்திரைக்கு வந்திக்கிறார். அவரது அறையிலேயே அவருடன் சிறுமி தங்கியிருந்தார். அப்போது தனது சகோதரி கூட என்று பார்க்காமல் பலமுறை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp