டெல்லி: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட.. இந்தியாவின் ஸ்டேட் ஆப் தி ஆர்ட் செயற்கைகோள் என்று அழைக்கப்பட்ட ஜிசாட் 1 செயற்கைகோளை வட்டப்பாதையில் நிறுத்த முடியாமல் இஸ்ரோ தோல்வி அடைந்துள்ளது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட “டெக்னிக்கல் பிரச்சனை” காரணமாக ஜிசாட் 1 செயற்கைகோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி-F10 ராக்கெட் தோல்வி அடைந்துள்ளது.. என்னதான் நடந்தது என்று பார்க்கலாம்.
ஜிஎஸ்எல்வி-F10 ராக்கெட் சொதப்பியது குறித்து பார்க்கும் முக்கியமான சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் விஷயம், ஜிசாட் 1 இஓஎஸ் வகை செயற்கைகோள் என்பது பூமியை கண்காணிக்க உதவும் சாட்டிலைட் ஆகும். முக்கியமாக இந்தியாவின் இயற்கை வளங்கள், நிலப்பரப்புகள், வானிலை மாற்றங்கள் இயற்கை பேரிடர்களை கண்டறிய உதவும் செயற்கைகோள் ஆகும்.
கிளைமேட் சேஞ்ச் என்ற பூதம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் போது இந்த ஜிசாட் 1 இஓஎஸ் அதிக கவனம் பெற்றது. இதனால் வானத்தில் இருக்கும் இந்தியாவின் கண் என்ற பெயரில் “ஐ இன் தி ஸ்கை” என்றுஇதை அழைத்து வந்தனர். இந்த ஜிசாட் 1 இஓஎஸ் செயற்கைகோள் ஏவப்பட்டால் நிலப்பரப்பு ரீதியாக பல்வேறு ஆய்வுகளை, முடிவுகளை, நடவடிக்கைகளை எடுக்க எதுவாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இன்று இந்த செயற்கைக்கோளை ஏவுவது தோல்வியில் முடிந்துள்ளது.
சில ரெக்கார்ட்
இன்று இந்த திட்டம் வெற்றி பெற்று இருந்தால் அது பல சாதனை பட்டியலில் சேர்ந்து இருக்கும். இந்த ஜிசாட் 1 இஓஎஸ் செயற்கைகோள் திட்டம்தான் இந்தியாவின் 8வது கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் ஏவப்படும் செயற்கைகோள். அதோடு இந்த வருடத்தின் முதல் இயற்கை, வானிலை தொடர்பான இந்தியாவின் சாட்டிலைட் என்ற பெயரை இது பெற்று இருக்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜிசாட் 1 இஓஎஸ் செயற்கைகோள் திட்டம் தோல்வியில் முடிந்தது எப்படி என்று பார்க்கலாம்.
வட்டப்பாதை
இந்த ஜிசாட் 1 இஓஎஸ் செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் மூலம் விண்ணில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இதில் மொத்தம் மூன்று எஞ்சின்கள் உள்ளது. இந்த மூன்று என்ஜின்களை மூன்று ஸ்டேஜ்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு என்ஜினாக எரிந்து முடிந்த பின் அடுத்த எஞ்சின் தானாக இயங்கி ராக்கெட்டை விண்ணுக்கு கொண்டு செல்லும். முதல் இரண்டு திட எஞ்சின்கள் எரிந்த பின் மூன்றாவது எஞ்சினான கிரையோஜெனிக் எஞ்சின் இயங்கும்.
ராக்கெட்
இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்ப செய்திகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு கிரையோஜெனிக் எஞ்சின் குறித்து தெரிந்து இருக்கும். உலக நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொடுக்க மறுத்தது. ரஷ்யா கிரையோஜெனிக் எஞ்சின்களை வழங்கி வந்தாலும் கூட அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்கவில்லை. 1982ல் இருந்து கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்க முயன்று கடைசியில் 2003ல் முதல் டெஸ்ட் வெற்றிகரமாக முடிந்து 2014ல் தான் முதல்முறையாக ஜிஎஸ்எல்வியில் கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இயக்கப்பட்டது.
திரவ எரிபொருள்
இந்தியாவிடம் இப்போது CE-7.5, CE-20 ஆகிய இரண்டு வகையான கிரையோஜெனிக் எஞ்சின்கள் உள்ளது. ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனை திரவ நிலையில் வைத்து எஞ்சினை இயங்குவதே கிரையோஜெனிக் எஞ்சின் ஆகும். இதற்காக ஆக்சிஜனை -183 ° செல்ஸியஸ் மற்றும் ஹைட்ரஜனை -253 ° செல்ஸியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும். இது திரவ நிலையில் இருக்க வேண்டும். இந்த எஞ்சினை உருவாக்குவது மிக மிக கடினம். இதன் திரவ நிலையை கட்டுப்படுத்த உள்ளே வெப்பநிலை கட்டுக்குள் இருக்க வேண்டும். இதனால்தான் இந்த தொழில்நுட்பத்தை உலக நாடுகள் இந்தியாவிற்கு தர மறுத்தது (பொக்ரான் அணு ஆயுத சோதனைக்கு பின்).
தோல்வி
இந்தியா கடந்த காலங்களில் கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் வெற்றிகரமாக ராக்கெட்டுகளை ஏவி இருந்தாலும் இன்று அந்த எஞ்சின்தான் தோல்வி அடைந்துள்ளது. இன்று ஜிசாத் 1 செயற்கைகோளை ஏந்தி ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் விண்ணில் சென்றது. இதில் 2.31 நிமிடத்தில் முதல் ஸ்டேஜ் திட எஞ்சின் சிறப்பாக இயங்கி முடித்து கழன்று கொண்டது. அதன்பின் 4.51வது நிமிடத்தில் இரண்டாவது ஸ்டேஜ் எஞ்சினும் சிறப்பாக இயங்கி முடித்து கழன்று கொண்டது.
மூன்றாவது
இப்போது மூன்றாவது எஞ்சின் இயங்க வேண்டும். இதுதான் கிரையோஜெனிக் எஞ்சின். 133.53வது கிலோ மீட்டர் உயரத்தில் இந்த கிரையோஜெனிக் எஞ்சின் இயங்கி இருக்க வேண்டும். ஆனால் கிரையோஜெனிக் எஞ்சின் இயங்காமல் செயல் இழந்து உள்ளது. இதற்கான காரணத்தை இஸ்ரோ தெரிவிக்கவில்லை. வெறுமனே டெக்னிக்கல் குறைபாடு என்று கூறி உள்ளனர். கிரையோஜெனிக் எஞ்சின் கடைசி நேரத்தில் இயங்காமல் போனதால் செயற்கைக்கோளை வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது.
கிரையோஜெனிக் எஞ்சின்
இரண்டு எஞ்சின்கள் இயங்கிய நிலையில் கடைசி கட்டத்தில் கிரையோஜெனிக் எஞ்சின் இயங்கவில்லை. அது inginte ஆகலாம் போன்றதால் ராக்கெட் அதற்கு மேல் மேலே பறக்காமல் ராக்கெட் கீழே விழுந்துள்ளது. மொத்தமாக மூன்றாவது ஸ்டேஜில் ஒரு நொடி கூட ராக்கெட் பறக்காமல் அப்படியே கீழே விழுந்துள்ளதுதான் ராக்கெட் தோல்வி அடைந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. orbit எனப்படும் செயற்கைகோள்கள் இருக்கும் வட்டப்பாதைக்கு செயற்கைகோள் நகர்ந்து செல்லும்.
செயற்கைகோள்
செயற்கைகோளில் இருக்கும் சிறிய ரக எஞ்சின்கள் உதவியுடன் இப்படி வட்டப்பாதையை மாறி கடைசி வட்டப்பாதையில் நிலை கொள்ளும். ஆனால் இன்று ஜி சாட் 1 ரக ராக்கெட்டை Geosynchronous Transfer Orbitல் நிலைநிறுத்த முடியாமல் ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் தோல்வி அடைந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த செயற்கைகோள் கடைசியில் இலக்கை எட்டாமல் போனது பெரிய ஏமாற்றம் அளித்தது.
தோல்வி
கடைசி 2 மீ தூரத்தில் மங்கள்யான் 2 எப்படி தோல்வி அடைந்ததோ அதேபோன்றதொரு தோல்வி மீண்டும் ஏற்பட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளின் இதயத்தை கணக்க செய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு குறித்து ஆலோசனை செய்து வருகிறோம், எங்கே தவறு நடந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன் தெரிவித்துள்ளார்.