சென்னை: சத்தமே இல்லாமல் அடுத்தக்கட்ட அதிரடியில் இறங்க போகிறார் சசிகலா.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு எடப்பாடி பழனிசாமி & கோ கலங்கி போய் உள்ளது.. ஓபிஎஸ் & கோ வேடிக்கை பார்க்க தயாராகி வருகிறது..!
ஜெயிலில் இருந்து ஆன்-தி-வே ஜோலார்பேட்டையில் வரும்போது, “இனி என் அரசியலை பொறுத்திருந்து பாருங்க” என்று செய்தியாளர்களிடம் சொன்ன சசிகலா, இப்போதுதான் அந்த அரசியலை மெல்ல மெல்ல வெளிப்படுத்தி வருகிறார்.
விலகல்?
சசிகலாவாவது, அரசியலை விட்டு ஒதுங்குவதாவது? என்ற மனோபாவம் மொத்த தமிழ்நாட்டு அரசியலுக்கும் தெரியும்.. ஜெயலலிதா இருக்கும்போதே, 30 வருஷம் லாபி செய்த சசிகலாவால், எந்த நாளும் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கவும் முடியாது.. ஆனால், கடந்த சில நாட்களாக தொண்டர்களுடன் சசிகலா பேசியதாக சொல்லப்படும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன…
மீட்டெடுப்பு
அதில், “கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். அதிமுகவில் நடக்கிறதெல்லாம் எனக்கு கஷ்டத்தை தருகிறது.. பார்க்க வேதனையா இருக்கு.. எப்படி இருந்த கட்சி அது? இன்னைக்கு அந்த கட்சியை மீட்டெடுப்பேன்” என்றெல்லாம் பேசி வருகிறார். அப்படியென்றால், இவர் எதற்காக அரசியலில் இருந்து ஒதுங்குகிறார்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அதிர்ச்சி
அந்த அறிக்கையை உற்று கவனித்தாலே ஒன்று புரியும்.. அரசியலில் இருந்து “ஓய்வு” என்று சொல்லவில்லை.. ஜஸ்ட் “விலகல்” என்றுதான் சொல்லி உள்ளார்.. அதனால் இவர் எப்போது வேண்டுமானாலும் வருவார் என்றுதான் எல்லாருமே காத்திருந்தனர்.. இப்போது சசிகலாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதிமுக தலைமையை அதிர்ச்சியில் உள்ளது.
இரட்டை தலைமை
சசிகலா எடுத்தேன், கவிழ்த்தேன் இன்று இந்த முடிவுக்கு வரவல்லை.. இந்த 3 மாத காலம் அதிமுகவில் உள்ள செயல்பாடுகளை உற்று கவனித்து வந்துள்ளர்… இரட்டை தலைமைகளின் தனித்தனி அறிக்கைகளையும் வேடிக்கை பார்த்துதான் வந்தார்.. மற்றொரு பக்கம், டிடிவி தினகரனும் பெரிய அளவில் தனக்கு கைகொடுக்கவில்லை.. தன்னுடைய ஆதரவாள்ர்கள் என்று சொல்லப்பட்ட யாருமே நேரில் வந்து சந்திக்கவும் இல்லை..
ஆடியோ
அதனால்தான், இந்த மொத்த பேருக்கும் பதிலடி தரும் வகையில் தன்னை தயார் படுத்தி வருகிறார் சசிகலா. இப்போதைக்கு ஆடியோ மூலம் மட்டுமே கலக்கத்தை தந்து வரும் சசிகலா, விரைவில் இன்னொரு அதிரடியை கையில் எடுக்க போகிறார்.. அதன்படி, தன்னுடைய ஆதரவாளர்களை நேரடியாகவே சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.. அநேகமாக ஜூலை முதல் வாரத்தில் அனைவரையும் சந்திப்பார் என்று தெரிகிறது..
ஆதரவாளர்கள்
ஆனால், மாவட்டந்தோறும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.. கொரோனா தொற்று ஓரளவு குறைந்ததும், இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்றார்கள்.. ஆனால், இந்த முடிவு தற்போது கேன்சல் ஆகி உள்ளது.. மாறாக, சென்னையிலேயே தன்னுடைய வீட்டிலேயே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 4, 4 பேர் என தனித்தனியாக ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்
அதிருப்தி
மேலும் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த புள்ளிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதனால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, எடப்பாடி தரப்பு உஷாராகி விட்டதாம்.. அதனால், யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளார்களோ, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறது.. இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருந்தாலும், மறைமுகமான காய்நகர்த்தல்களில் எத்தனை தலைகள் கவிழ போகிறதோ என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!