டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டேராடூன் அருகே அமலவா ஆற்றில் வெள்ளம் மிகப்பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் கட்டப்பட்டிருந்த தற்காலிக பாலம் உடைந்ததால் ஆபத்தான நிலையில் ஆற்றை மக்கள் கடந்த மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் இமயமலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக உத்தரப்பிரதேசம் , இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மழை வெளுத்து வருகிறது. கனமழையல் கங்கை மற்றும் அதன் துணைநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலம் உடைந்தது
டேராடூன் அருகே கங்கையின் துணை நதியான அமலவா ஆற்றில் வெள்ளம் மிகப்பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மக்கள் தவிப்பு
இதனால் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கிறார்கள். இந்நிலையில் பெண்கள் சிலர் கொஞ்சம் மிஸ்ஸானாலும் மரணம் என்கிற நிலையை பொருட்படுத்தாமல் கடும் வெள்ளத்தில் ஆற்றை கடந்துள்ளனர்.
வைரலாகும் வீடியோ
ஆற்றின் ஒரு கரையில இருந்து மறு கரைக்கு கம்புகளை பிடித்த பிடி பெணகள் கடக்குகிறர்கள். அவர்களுக்கு இளைஞர்கள் கம்புகளை கொடுத்து உதவுகிறார்கள். நல்ல வேளையாக யாரும் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கவில்லை. காப்பாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இதனிடையே கனமழை காரணமாக இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்தே இன்னமும் மீளாத இந்த மாநிலங்கள் கனமழையால் தவிக்கின்றன. உத்தரகண்ட் மாநிலம் சாமோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் ஆர்பரித்து ஓடுவதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா வானிலை ஆய்வு மையம் அடுத்த இரு நாட்களுக்கு இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.