Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

விதிகளை மீறி வாக்குச்சாவடியில் வாக்குசேகரித்த திமுகவினர்…

karur-jothimani-1-updatenews360

கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சியில் உள்ள மொத்தம் 48 வார்டில், ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 47 வார்டுகளுக்கு இன்று காலை முதல் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கரூர் 12வது வார்டு, புனித மரியன்னை அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே, திமுக அமைச்சரும், மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் களம் இறங்கி உள்ளார். தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடும் அந்த வேட்பாளருக்கு திமுகவினர் வாக்குச் சாவடிக்குள் பிரச்சாரம் செய்த நிலையில், கரூர் மாவட்ட பாஜக சார்பில் அதன் தலைவர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து அதிமுக மற்றும் மற்ற சுயேட்சை வேட்பாளர்களும் புகார் அளித்த நிலையில், கரூர் காங்கிரஸ் எம்பி செல்வி ஜோதிமணி, அப்பகுதிக்கு வந்து கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரபு சங்கரிடம் செல்போன் வாயிலாக புகார் அளித்தார். இருப்பினும், சுயேச்சை வேட்பாளரும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் பூத் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடி விட்டு வெளியாகாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp