திருப்பூர் : தாராபுரத்தில் உடைந்த சக்கர நாற்காலியை வைத்து முதியவர்களை வாக்களிக்க அழைத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் சிரமமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் தாராபுரம் புனித அந்தோணியார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அவரை உடைந்த சக்கர நாற்காலியில் அமர வைத்து சக்கர நாற்காலியை தரதரவென இழுத்து சென்று வாக்களிக்க வைத்தனர்.
இதனால் முதியவர் பெரும் சிரமத்திற்கு உள்ளானதுடன், பெரும் அதிர்ச்சியும் அடைந்தார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தேர்தலுக்காக வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள் தரமில்லாதவை என்றும், அதனை வழங்கிய தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.