சென்னை: ரசிகர்களின் இரண்டு ஆண்டுகால காத்திருப்புக்கு தக்க பலனாக தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி அதகளம் செய்து வருகிறது.
வரும் ஜூலை 15ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன் டே ஸ்பெஷலாக இன்றே தல அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வெளியான மோஷன் போஸ்டரை பார்த்த தல ரசிகர்கள் வலிமை படமே வெளியானது போல திருவிழாவை ஆரம்பித்துள்ளனர்.
60வது படம்
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாராக இருந்து தல அஜித்தாக மாறியுள்ள நடிகர் அஜித் குமாரின் 60வது படம் தான் வலிமை. தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் நடிகர் அஜித்தின் வலிமை படம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு முன்பே பிசினஸை ஆரம்பித்து விட்டது.
போனிகபூர் தயாரிப்பு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தை தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் தயாரித்து இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வலிமை படத்தையும் போனி கபூரே தயாரித்துள்ளார்.
இரண்டாவது முறை
நடிகர் அஜித் பொதுவாகவே ஒரு ஹிட் கொடுக்கும் இயக்குநரிடம் மீண்டும் கைகோர்ப்பது வழக்கம். இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து 4 முறை இணைந்து நடித்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக இயக்குநர் எச். வினோத் உடன் இணைந்து வலிமை படத்தில் நடித்துள்ளார். அடுத்த படமும் வினோத் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் இசையில்
தல அஜித்துக்கு மங்காத்தா, பில்லா 2 படங்களில் பிஜிஎம் போட்டு தெறிக்கவிட்ட யுவன் சங்கர் ராஜா இசையில் மீண்டுமொரு தெறி மாஸ் பிஜிஎம் உடன் வலிமை படம் உருவாகி உள்ளது. மோஷன் போஸ்டரிலேயே யுவன் சங்கர் ராஜா தான் யார் என்பதையும் தல ரசிகர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்து காட்டி இருக்கிறார்.
வலிமை ஃபர்ஸ்ட் லுக்
வலிமை படத்தின் பூஜை போட்டதில் இருந்தே தல அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ தான் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் காத்திருப்பையும் கணப் பொழுதில் பூர்த்தி செய்யும் விதமாக கொல மாஸாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஆட்சி செய்கிறது.
வலிமை திருவிழா
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் தல ரசிகர்கள் வலிமை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் 3 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு வெளிநாட்டு படப்பிடிப்புக்கு படக்குழு செல்லப் போகிறதாம்.
பைக் ரேசர்
பைக் ரேசர் லுக்கில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வெறித்தனமாக பைக் ஓட்டும் ஹாலிவுட் ஸ்டைல் வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் கொடுத்து வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் சிம்பிள் பிஜிஎம் ரசிக்க வைக்கிறது.
இளமையான அஜித்
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தில் எல்லாம் பார்த்தது போல அல்லாமல், இயக்குநர் எச். வினோத் பிராமிஸ் செய்ததை போலவே 10 வயது இளமையான தல அஜித்தை மோஷன் போஸ்டரில் ரசிகர்கள் கண்டு கூஸ்பம்ப் அடைந்து வருகின்றனர்.