பீஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மறுபடியும் பரவி வருவதால், அந்நாடு அனைத்து முனனெச்சரிக்கை நடவடிக்கைளிலும் இறங்கி விட்டது.. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 2 வருடங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் உருவானதே சீனாவில்தான் என்று சொல்லப்பட்டது.
அதிலும் வூஹான் நகரத்தில்தான் இது தோன்றியது என்றும், அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு பரவியது என்றும் தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.
தீவிரம் ஆனால், சீனாவோ, படுதீவிரமான முயற்சிகளை கையில் எடுத்தது… நிறைய கட்டுப்பாடுகளை விதித்து, தொற்றையும் சில மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் பரவிய தொற்றானது, 2வது அலை, 3வது அலை என உருமாறிவிட்டது.. மனித குலத்துக்கே அழிவை தந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கொரோனா வைரஸின் டெல்டா வகை திரிபானது, அதிக பரவல் தன்மை கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
அதாவது முதல் அலையை விட, 2வது அலை மிக மோசமான பாதிப்பை நமக்கு ஏற்படுத்தியது.. அந்த அளவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக முக்கிய காரணமே, இந்த டெல்டா வைரஸ்தான் என்று ஆய்வுகள் சொல்லி வருகின்றன.. மற்ற நாடுகளில் 2வது அலை, 3வது அலை பரவிய நிலையில், சீனாவில் அதன் தாக்கம் மிக குறைவாகவே உள்ளதாக சொல்லப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவல் சீனா குறித்து வெளியாகி உள்ளது.
சீனாவின் ஃபுஜியான் மாகாணத்திலுள்ள புடியான் நகரில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதாம்.. செப்டம்பர் 10 முதல் 12 வரை மட்டும் அங்கு 50க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கும் காரணம் டெல்டா வைரஸ்தான் என்கின்றனர்.. எனவே, மறுபடியும் சவாலை ஏற்று, தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கிவிட்டது. மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்காத வகையிலும், தொற்றை அழிக்கும் வகையிலும் நிறைய பிளான்களில் இறங்கி உள்ளது.
டெல்டா வைரஸ் இந்த திடீர் பரவல் கடந்த சிலநாட்களாகத்தான் வந்துள்ளது.. புடியான் நகருக்கு சிங்கப்பூரில் இருந்து ஒருவர் சமீபத்தில் தான் திரும்பி வந்துள்ளார்.. அவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது.. அவர்மூலம்தான் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாம்.. அந்த நபரை 14 நாட்கள் தனிமையில் வைத்து டெஸ்ட் செய்துள்ளனர்.. அப்போதுதான், பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது
தொற்று பாதிப்பு அவரது மகன் ஸ்கூலுக்கு சென்று வருகிறான்.. அந்த மகனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால் அது தெரியாமலேயே அந்த சிறுவன் ஸ்கூலுக்கு சென்றதால், 36 குழந்தைகளுக்கு தொற்று பரவியுள்ளது… எனவே, புடியான் பள்ளிகளில் உடனடியாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன… புட்டியான் நகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.. அதேபோல, ஜிம், சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.
துண்டிப்பு முக்கிய தேசிய சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன… பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.. சீனாவில் தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுதான் முதன்முறையாம்.. எனவே, தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பள்ளிக் குழந்தைகள் வாயிலாக பரவுவதால் இந்த நடவடிக்கையை அந்த நாடு மேற்கொண்டுள்ளது
அறிவுறுத்தல் அத்துடன் டெல்டா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கைகளையும் கையில் எடுத்துள்ளது… அனைத்து மக்களும் டெஸ்ட் செய்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மறுபடியும் கொரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் சீனா அறிவுறுத்தியுள்ளது.