சென்னை மாநகராட்சி 2,573.54 கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் நிலையில், நிதி பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. இத்துடன், ஒப்பந்ததாரர்களுக்கு 140 கோடி ரூபாய், அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் பாக்கிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகையில் ஆண்டுக்கு 7,686 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
மேலும், பயன்பாட்டிற்கான கட்டணமாக குடிநீர் வாரியம், மின் வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதன் வாயிலாக 3,441 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையால், மாநகராட்சி தத்தளித்து வருகிறது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில், 334 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை இருந்தது. தற்போது, கடன் சுமையும் அதிகரித்துள்ளதால், நிலுவை வைத்துள்ள சொத்து வரியை வசூலிக்க, மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டில், சென்னை மாநகராட்சியின் கடன் 2,715.17 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 141.63 கோடி ரூபாய் கடனை அடைத்துள்ளோம்.
அதேநேரம், சென்னையில் வசிக்கும் ஒரு கோடி மக்களுக்கான பல்வேறு வளர்ச்சி பணிகள்,…
நோய் தடுப்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, சொத்து வரி வசூலிப்பில்ற்றும் வெள்ள தடுப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் செலுத்தி வருகிறோம்.
சொத்து வரி போன்ற பல்வேறு வருவாய் வாயிலாக மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த மூன்று நிதியாண்டு கடன் விபரம்
நிதியாண்டு கடன் (ரூ.) ஒப்பந்ததாரர்கள் நிலுவை (ரூ.) அரசு துறைகளுக்கு நிலுவை (ரூ.).
2021 – 22 2,715.17 கோடி 218.57 கோடி 511.97 கோடி.
2022 – 23 2,591.83 கோடி 279.43 கோடி 373.51 கோடி
2023 – 24 2,573.54 கோடி 140 கோடி 728 கோடி.