முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பிரபல நிருவனமான சாம்சாங் ரூ.1588 கோடி முதலீட்டில் காற்றழுத்தக் கருவிகள் உற்ப்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு கையெழுத்திடப்பட்டது.
சென்னையில்,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (15.03,2022) நடந்த விழாவில் பிரபல நிறுவனமான சாம்சாங் உடன் ரூ.1588 கோடி முதலீடு மற்றும் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்குடிய காற்றழுத்த கருவிகள் உற்பத்தி செய்யக் கூடியத் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த வகையில் நண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள்,கணினித்திரைகள்,குளிர்சாதனப்பெட்டிகள்,குளிரூட்டிகள் மற்றும் சலவை சாதனங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தை,ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சிப்காட் நிறுவனத்தின்சிறப்பு பொருளாதார மண்டலத்திலும்,ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவில் அமைத்திட (உள்நாட்டு கட்டணம்) உத்தேசித்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் 10.11.2006 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திப்பட்டது.
மேலும் அந்த ஆலையை 13.11.2007 ஒரே வருடத்தில் கட்டிமுடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த முதலீட்டு நடப்பாண்டில் ரூ.1800 கோடி உயர்ந்துள்ளது.
இன்று நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சாம்சாங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத்திற்கான கட்டுமானப் பணிகள் 2022-ஆம் ஆண்டில் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவுபெரும் எனவும்,2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டொண்டிற்கு 80 லட்சம் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும்,2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் 144 லட்சம் அளவிற்கு உற்பத்தியை பெருக்கிடத் திட்டமிட்டுள்ளது சாம்சாங் நிறுவனம்.
இவ்விழாவில்,மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தொழிற்துறை கூடுதல் தலைமைச் செயளாலர் ச.கிருஷ்ணன்,தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்,மேலாண்மை இயக்குநர் பூஜா குலர்கனி,தமிழ்நடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தா. ஆனந்த்,சாம்சாங் எலக்டானிக்கல் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசிய தலைவர் சியோங் டியேக் லிம்,சாம்சாங் நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணை மேலாண்மை இயக்குநர் பீட்டர்,தொழிலதிபர்கள் மற்றும் உயர் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.