புதுடெல்லி: உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார் என உக்ரைன் தூதர் பேட்டி அளித்து உள்ளார். உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என உக்ரைன் தூதர் கூறி உள்ளார். இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறுகையில், ரஷ்யாவுடன் இந்தியா சிறப்பான உறவைக் கொண்டுள்ளது.
மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகவும் தீவிரமான பங்கை வகிக்க முடியும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.