Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

‘மூளை பலமடங்கு சுறுசுறுப்பா இருக்க விபரீத முயற்சி’: முதியவரை கொன்று மூளையை சாப்பிட்ட இளைஞர்..!!

human-meat-1024x571-1

Author: RAMESH, Chennai

அமெரிக்காவில் மூளை சுறுசுறுப்புக்காக முதியவரை கொன்று மூளையை சாப்பிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் மனிதர்களை கொன்று அவர்களது பாகங்களை சமைத்தோ அல்லது அப்படியே சாப்பிடும் சம்பவங்கள் குறித்து நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஒருவித மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் இப்படிபட்ட கொடூர சம்பவங்கள் நடைபெறும் என்பது நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

அமெரிக்காவில் இதாஹோ என்ற மாகாணத்தில் ஒருவர் மனித மாமிசம் சாப்பிடுவதற்கு கூறிய காரணம் காவல்துறையினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதாஹோ மாகாணத்தில், ஒரு டிரக்கில் தலைகீழாக தொங்கிய முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். உடல் முழுவதும் காயங்களுடன், ரத்தம் சொட்ட சொட்ட காணப்பட்ட அந்த முதியவரின் உடலில் பல பாகங்கள் இல்லாமல் இருந்துள்ளது.

விசாரணையில் இறந்தவர் பெயர் டேவிட் பிளாகெட் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கிடைத்த துப்புகளில் அடிப்படையில் ஜேம்ஸ் டேவிட் ரசல் என்பவரின் வீட்டில் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் ஒரு தட்டில் கல்லீரல், நுரையீரல் பாகங்கள், ரத்தம் நிறைந்த கண்ணாடி குவளை, கத்தி, ரத்தக்கறை படிந்த மைக்ரோவேவ் ஓவன் போன்றவை இருந்துள்ளது.

ஜேம்சை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தன் மூளை சுறுசுறுப்பாக செயல்பட, டேவிட் பிளாகெட்டை கொலை செய்து அவரது மூளை உள்ளிட்ட பாகங்களை சாப்பிட்டு வந்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஜேம்சை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜேம்சை மன நல மருத்துவ சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டது. இதாஹோ மாகாணத்தில் நர மாமிசம் உண்போருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். ஒருவேளை இந்த வழக்கில் ஜேம்ஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இதாஹோ மாகாணத்தில் முதன் முதலாக நரமாமிசம் சாப்பிட்டவருக்கான தண்டனையாக இருக்கும் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp