துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கு கொள்வற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 26, 27ம் தேதிகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், முதலீட்டை ஈர்ப்பதற்காக முதன்முறையாக மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இது.
192 நாடுகள் பங்கேற்கும் துபாய் சர்வதேச கண்காட்சி இந்த (மார்ச்) மாத இறுதியில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், தமிழக அரசின் சார்பாக கைத்தறி விவசாயம் மற்றும் சிறு-பெரு தொழில் தொடங்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அங்கே அரங்கு அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், அங்கே, பல நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
