Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

முட்டி நிக்குது முட்டி வரை சாக்கடை தண்ணி..கஸ்தூரி கேட்டதுமே வீட்டு முன்புள்ள ஆதாரத்தோடு திரண்ட திமுக

images (31)

சென்னை : சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகும். அந்தவகையில், தற்போது சென்னையில் மழை வெளுத்து கட்டிவரும் நிலையில், மறுபடியும் புத்தம் புதிய விமர்சனங்களுடன் வந்திருக்கிறார் கஸ்தூரி.

சென்னை : சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகும். அந்தவகையில், தற்போது சென்னையில் மழை வெளுத்து கட்டிவரும் நிலையில், மறுபடியும் புத்தம் புதிய விமர்சனங்களுடன் வந்திருக்கிறார் கஸ்தூரி.

கடந்த வருடம் பெய்த மழை அளவுக்கு, சென்னை பாதிக்கப்பட்டுவிடுமோ? என்ற கலக்கம் சென்னைவாசிகளை கவ்வி வந்தது.. ஆனால், 20 செ.மீ. அளவுக்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பில்லை, சென்னை ஆபத்திலிருந்து தப்பிவிட்டது என்று வானிலை ஆய்வாளர்கள் கணிப்புகளை சொல்லி வருகிறார்கள்.

சென்னை மக்கள்: இதுஒருவகையில் சென்னை மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்றாலும், சாலைகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் எப்போது வடியும் என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 3 நாளைக்கு சென்னைக்கு ரெட் அலர்ட் என்றதுமே, அரசு இயந்திரம் மும்முரமாக களமிறங்கியது.. எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு 2 தினங்களுக்கு முன்பே முடுக்கிவிட்டது.. முதல்வர் ஸ்டாலின் இது சம்பந்தமாக தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரடியாகவே சென்று பார்வையிட்டார்.. மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மீட்பு பணிகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பாராட்டுக்கள்: இந்நிலையில், அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திகளை தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழக அரசு முன்னெடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன.

அந்தவகையில், திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளா ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார். அதில், “மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார். டாக்டர் ஷர்மிளா: ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்தமே நடிகை கஸ்தூரி டென்ஷன் ஆகிவிட்டார்.. இதையடுத்து, ஷர்மிளாவுக்கு பதிலடி தந்துள்ளார். கஸ்தூரி தன்னுடைய ட்வீட்டில், “ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்” என்று கிண்டலடித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு: இப்படித்தான் கடந்த வருடமும் வெள்ள பாதிப்பின்போது, சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேக்கம் நீடித்து காணப்பட்டது. நடிகை கஸ்தூரியின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ளது.. இவரது வீட்டின் முன்பு மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றது. இதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கஸ்தூரி. அதில், “ஆட்சிக்கு வந்ததும் மழைவடிகால்ன்னு எட்டு மாசம் தோண்டி போட்டுருந்தாங்க. தள்ளிக்கிட்டே போச்சு ,மழை வந்துருச்சு. ரோட்டையும் மூடல்லே, வேலையும் முடியல்லே… இப்போ தெரு சாக்கடை ஓவர்ஃப்ளோ ஆகி எங்க வீட்டை சுத்தி கப்பு தண்ணி” என்று பதிவிட்டிருந்தார்..

கமல் பாராட்டு: அந்த நேரத்தில், திமுக கூட்டணியிலுள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டியிருந்தார். கமலின் இந்த பாராட்டை பார்த்து மேலும் கொந்தளித்து போனார் கஸ்தூரி. கமல்ஹாசன் பேசியதை தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்து, “தட் படுத்தேவிட்டானய்யா மொமென்ட்.. மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது” என்று பதிவிட்டிருந்தார்.

சாக்கடை தண்ணி: இப்படி ஒவ்வொரு முறை சென்னையில் மழை வரும்போதும், கஸ்தூரியின் வீடியோவும் பின்னாடியே வந்து சலசலப்பை உண்டுபண்ணிவிடுகிறது.. இப்போது கஸ்தூரி பதிவிட்டிருக்கும், “முட்டிவரை சாக்கடை தண்ணி” பதிவுதான் இணையத்தில் கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp