சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி.தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து சரிவர அதனை நடித்து ரசிகர்களை ஈர்ப்பவர் ஜெயம் ரவி.தற்போது ஜெயம் ரவி “பூலோகம்” படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள படத்தை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பிக்கை அளிக்கிறது
ஜெயம் ரவி நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த பூமி சோபிக்காமல் போன நிலையில் ஜெயம் ரவியின் வரவிருக்கும் படங்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன, மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என ஜெயம் ரவியின் லைன் அப் நம்பிக்கை அளிக்கிறது.
மிச்சம் உள்ளது
இதில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துள்ளது. ஜன கன மன படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாகப்படவுள்ளன அதனால் அந்த படத்தின் பணிகள் நிலுவையில் உள்ளது. ஜன கன மன படத்தின் இயக்குனர் அஹ்மத் உடன் மற்றொரு படம் ஜெயம் ரவி பண்ண உள்ளதாகவும் பேசப்படுகிறது.
இயக்குனர் கல்யாண்
2015-ம் ஆண்டு கல்யாண் – ஜெயம் ரவி கூட்டணியில் வெளியான “பூலோகம்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வட சென்னை பகுதியில் பரம்பரை , பரம்பரையாக கலக்கிய பாக்ஸர்கள் பற்றியது பூலோகம் திரைப்படம். இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ள இந்த படம் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
படத்தின் நாயகி
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத நடுவில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது. இந்த படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.