Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மியான்மரில் 30 பேர் உயிருடன் எரித்துக்கொலை?: ராணுவத்தின் மீது மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

myanmar-1024x571

யாங்கூன்: மியான்மரில் குழந்தைகள் உள்பட 30 எரித்துக்கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியது.

தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உள்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் தடுப்புக்காவலில் வைத்தது. ராணுவ ஆட்சியை மியான்மர் மக்கள் ராணுவத்தின் செயலை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வரும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அநியாயமாக கொன்று விதித்து வருகிறது ராணுவம். 30க்கும் மேற்பட்ட உடல்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும், அங்குள்ள சிறுபான்மையினர் மக்கள் மீதும் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் மியான்மரின் கயாவில் குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கயா மாநிலத்தில் ஹ்ப்ருசோ நகரத்தின் மோ சோ கிராமத்திற்கு அருகில் வாகனங்களில் எரிந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இவர்கள் அனைவரும் மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டவர்கள் என்று காரென்னி எனப்படும் மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. மியான்மர் ராணுவத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல உள்ளூர் எதிர்ப்பு சக்திகள் உருவாகியுள்ளன. அவர்களை துரோகிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வரும் ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp